இலங்கை நாட்டை சீரழிக்க மேற்கத்தேய நாடுகள் பேஸ்புக் என்ற முகநூலை பயன்படுத்தும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபை தேர்தலை முன்னிட்டு கிராந்துருகோட்டையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 50வீத வாக்குகளை பெறுவதைக்கூட மேற்கத்தேய நாடுகள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் இந்த மேற்கத்தேய நாடுகள் ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க அல்லது மாதுலேவாவே சோபித தேரர் ஆகியோரை போட்டியிட வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கக்கூடிய சிங்கள வாக்குகளை பெறமுடியாமல் செய்வதே நோக்கமாகும் என்று அமைச்சர் கூறினார்.
இவ்வாறு சிங்கள வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் எவரும் 50வீத வாக்குகளை பெறமுடியாமல் செய்வதே மேற்கத்தேய நாடுகளின் திட்டம் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை பலத்தை பெறாது போகும் சந்தர்ப்பத்தில் முகநூலை பயன்படுத்தி நாட்டை சீரழிப்பதே மேற்கத்தேய நாடுகளின் நோக்கம் என்றும் வீரவன்ச கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUho2.html
Geen opmerkingen:
Een reactie posten