ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதித் தலைவர் வழங்கும் விடயத்தில் தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்த மங்கள சமரவீர தற்போது லண்டன் சென்றுள்ள நிலையில், அங்கே ஒரு ரகசிய கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. மகிந்தரின் அமைச்சரவையில் உள்ள சில முக்கிய அமைச்சர்களின் எடுபிடிகள், லண்டன் "சட்பெரி" பகுதியில் உள்ள, உணவகத்தில் கூடி, இதுதொடர்பாக கலந்தாலோசித்துள்ளார்கள். மேலும் இதில் சில தமிழர்களும், பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் ஒரு தமிழ் அமைப்பை சார்ந்தவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் என்ற செய்தியும் கூடவே எட்டியுள்ளது.
மகிந்தரை அழிக்க ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரணிலுடன் கைகோர்பதில் தவறில்லை என்று, சிந்திக்கும் பல தமிழர்களும் சில தமிழ் அமைபுகளும் லண்டனில் உள்ளார்கள். இவர்களே தொடர்சியாக ரணில் விக்கிரமசிங்கவை , சந்தித்தும் வருகிறார்கள். அடிக்கடி லண்டன் வரும் ரணிலை சந்திக்கும் சில தமிழர்கள், வழக்கமாக அவருடன் கூடி மந்திர ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆனால் ரணில் மகிந்தரின் நெருங்கிய நண்பர் என்ற விடையம் இவர்களுக்கு தெரியுமோ என்னவோ ? தமிழர்களின் போராட்டம் அழிக்கப்படும்போதும், கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்படும் போதும், மகிந்தருக்கு ஆதரவை அள்ளி வழங்கிக்கொண்டு இருந்த ஒரே எதிர்கட்சி தலைவர் ரணில் தான்.
தற்போது இக் கட்சியில் உள்ள மங்கள சமரவீர, சஜித் பிரேமதாசவுக்கு பிரதி தலைவர் பதவி வழங்கியதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் இவர் மீண்டும் மகிந்தர் பக்கம் தாவ வாப்பு உள்ளது. இன் நிலையில், சில தமிழர்கள் , மங்கள சமரவீரவை சந்தித்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து வைத்திருப்பது நல்லது. ரணில் கொளுக்கட்டை என்றால், மகிந்தர் ஒரு மோதகம் மாதிரி. உருவத்தில் தான் வேறு. உள்ளே இருப்பது எல்லாம் ஒன்றுதான். அது சிங்களம் என்னும் பேரினவாதம் !
http://www.athirvu.com/newsdetail/950.html
Geen opmerkingen:
Een reactie posten