[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:49.23 AM GMT ]
நாட்டின் பொதுமக்கள் தொடர்பிலான பொருளாதாரம் மற்றும் புதிய கொள்கைகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட சுட்டெண்படி ஆசிய நாடுகளிலும் உலகளாவிய ரீதியிலும் ஜப்பான் முதலிடம் பெற்றுள்ளது.
மக்களுக்கான பொருளாதாரம், அறிவு பூர்வமான பொருளாதார அறிவு உட்பட்ட 36 விடயங்கள் இந்த சுட்டெண்ணுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் பின்லாந்து இரண்டாம் இடத்தையும் அமெரிக்கா நான்காம் இடத்தையும் பெற்றுள்ள.
தென்கொரியா, மூன்றாம் இடத்தையும் சீனா 11 வது இடத்தையும் பெற்றுள்ளன. இலங்கைக்கு 19வது இடத்தையும் இந்தியா 14வது இடத்தையும் பெற்றுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfr3.html
தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ள ஜனாதிபதி மஹிந்த
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:57.17 AM GMT ]
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமிழக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே குறித்த படகுகளை விடுவிக்கப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.
தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் 72 படகுகளுடன் 78 மீனவர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தமக்கு பிரச்சினைகளை கொடுக்குமாக இருந்தால், மீன்பிடித்தொழிலை விட்டு மாற்றுத்தொழில் குறித்து ஆராய வேண்டியிருக்கும் என்றும் தமிழக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfr5.html
Geen opmerkingen:
Een reactie posten