[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 03:00.35 AM GMT ]
ஏற்கனவே தாம் சஜித் பிரேமதாஸவை பற்றி கூறிய கருத்துக்களில் மாற்றங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசியக் கட்சியினரின் கருத்துக்களையே தாம் வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ தமது பணிகளை காட்டவேண்டும் என்று கூறியது சவால் அல்ல. அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது கட்சியின் தலைவரது வெற்றியை உறுதி செய்வதற்கான பணிகளை சஜித் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே தாம் அவ்வாறு கூறியதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சஜித் பிரேதமாஸ, கட்சியின் ஒற்றுமை, எதிர்ப்பார்ப்பு என்பவற்றை இட்டுசெல்லும் வகையில் செயற்பட வேண்டும் என்று மங்கள குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது கட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தி எதிரியை பலப்படுத்த தாம் விரும்பவில்லை என்றும் மங்கல தெரிவித்துள்ளார்.
இளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சிறந்த உதாரணத்தை காட்டியுள்ளார் என்றும் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfr6.html
குண்டு துளைக்காத கார் வேண்டாம்: பரிசுத்த பாப்பரசர்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 05:18.53 AM GMT ]
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 3 நாள் பயணமாக இலங்கை வரும் பாப்பரசர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளளார். இந்நிலையில் அவரின் வருகை தொடர்பான ஏற்பாடுகள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னர் இலங்கைக்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலின் பயணத்துக்கு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டது.
இதேபோன்று தங்போது இலங்கை வருகைதரவுள்ள பாப்பரசர் பிரான்சிஸின் பயணத்துக்கும் குண்டு துளைக்காத கார் ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் இந்தக் காரை ஏற்க பாப்பரசர் மறுத்து விட்டார் என்றும் அவர் மக்களுக்கு அருகிலேயே இருக்க விரும்புகிறார் எனவும் கூறினார் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfsy.html
Geen opmerkingen:
Een reactie posten