தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

மக்கள் மீது உளவியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகிக்கும் அரசாங்கம்!: ஜே.வி.பி. குற்றச்சாட்டு!

திறன்மிக்க ஆசிய நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:49.23 AM GMT ]
திறன்மிக்க ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் பொதுமக்கள் தொடர்பிலான பொருளாதாரம் மற்றும் புதிய கொள்கைகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட சுட்டெண்படி ஆசிய நாடுகளிலும் உலகளாவிய ரீதியிலும் ஜப்பான் முதலிடம் பெற்றுள்ளது.
மக்களுக்கான பொருளாதாரம், அறிவு பூர்வமான பொருளாதார அறிவு உட்பட்ட 36 விடயங்கள் இந்த சுட்டெண்ணுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் பின்லாந்து இரண்டாம் இடத்தையும் அமெரிக்கா நான்காம் இடத்தையும் பெற்றுள்ள.
தென்கொரியா, மூன்றாம் இடத்தையும் சீனா 11 வது இடத்தையும் பெற்றுள்ளன. இலங்கைக்கு 19வது இடத்தையும் இந்தியா 14வது இடத்தையும் பெற்றுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfr3.html
மக்கள் மீது உளவியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகிக்கும் அரசாங்கம்!: ஜே.வி.பி. குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:50.37 AM GMT ]
அரசாங்கம் மக்கள் மீது உளவியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்  போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உளவியல் ரீதியான ஆய்வுகளின் பின்னர், அரசாங்கம் இவ்வாறு மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
டிபென்டர் ரக வாகனங்கள் மற்றும் குண்டர்களை பயன்படுத்தி ஊவாவில் பதற்ற நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
மக்களை பீதிக்குள்ளாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று சுயாதீனமாக வாக்களிப்பதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அரசாங்கத்தின் இந்த அடக்குமுறைகளை முறியடிப்பது மக்களின் கடமையாகும்.
ஊவா மாகாணத்தில் அரசாங்கம் பிரயோகித்து வரும் அடக்குமுறைகளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயன்படுத்திக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfr4.html

Geen opmerkingen:

Een reactie posten