ரணில் பூஜை வழிபாடுகளுக்காக இந்தியா விஜயம்! - வடக்கு தெற்கு மக்களுக்கிடையில் நட்புறவு ஏற்படுத்தப்படவில்லை!– ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 02:11.06 AM GMT ]
நேற்று முன்தினம் அவசரமாக ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்ததாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதனும் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
விசேட பூஜை வழிபாடு ஒன்றிற்காக ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயம் செய்துள்ளதாகவும்ääநேற்றிரவு நாடு திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு தெற்கு மக்களுக்கு இடையில் மெய்யான நட்புறவு ஏற்படுத்தப்படவில்லை – ஐ.தே.க
வடக்கு தெற்கு மக்களுக்கு இடையில் மெய்யான நட்புறவு இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்மொன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் தெற்கு மக்களுடன் இன்னமும் கைகோர்த்துக் கொள்ளவில்லை.
இரு தரப்பினருக்கு இடையில் மெய்யான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் வெளிநாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையே ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தக் காரணமாகும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சர்வதேச சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வர விரும்புவதில்லை, சட்டம் ஒழுங்கு நிலைமையே இதற்கான காரணம்.
முதலீட்டாளர்களின் சொத்துக்களை பாதுகாக்க சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. நீதியின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் ஊழல் மோசடிகள் பற்றி ஆளும் கட்சியின் அமைச்சர்களே பகிரங்க விமர்சனங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
சிலர் அராசங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து நூல் வெளியிடுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதில்லை.
ஏனெனில், பேசுவதற்கு மட்டுமே நாடாளுமன்றம் செல்ல வேண்டியுள்ளது.
எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கசள் உள்வாங்கப்படுவதில்லை.
ஆளும் கட்சிக்கு ஆதரவானர்கள் எந்தக் குற்றம் செய்தாலும் நீதியின் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjs6.html
நிலங்கள் மட்டுமன்றி கால்நடைகளும் படையினரின் கட்டுப்பாட்டில்: அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்களின் கருத்துக்கள்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 02:19.50 AM GMT ]
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களுடைய நிலங்களில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படாத நிலையில், பெருமளவு கால்நடைகளையும் படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக முல்லை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கேப்பாப்பிலவு, சூரிபுரம், சீனியாமோட்டை உள்ளிட்ட நான்கு கிராமங்களில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காராணமாக இடம்பெயர்ந்த நிலையில், அவர்களுடைய நிலங்களில் படையினர் நிலைகொண்டு விட்டனர்.
இந்நிலையில் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேறாமல் சூரிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி கிராமத்தில் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்களுடைய மீள்குடியேற்றம் தொடர்ந்து இழுபறியில் உள்ளது.
மேலும் யுத்தம் நடைபெற்ற நிலையில் மக்கள் கைவிட்டுச் சென்ற பெருமளவு கால்நடைகளும் அந்தப்பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக மக்கள்
குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மக்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்வாக அபிவிருத்தி குழுவின் இணை தலைவர்கள், படையினர் சார்பில் கலந்துகொண்ட சிவில் தொடர்பு அதிகாரியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த படை அதிகாரி,
மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்காததுடன் 245ஏக்கர் நிலத்தில் மக்கள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன், மக்களுடைய கால் நடைகள் எவையும் தங்களிடம் இல்லை. இருந்த கால்நடைகள் அனைத்தையும் மக்களிடம் வழங்கி விட்டோம் என கூறினார்.
இதன்போது பேசிய மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், படையினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதிக்குள் உள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்குரிய கட்டிடத்தை பார்ப்பதற்கு தமக்கு அனுமதி வழங்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த படை அதிகாரி, தங்கள் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் மாவட்டச் செயலருக்கு தெரியப்படுத்துவதாகவும், அவர் அமைச்சுக்கு தெரியப்படுத்துவதாகவும் கூறியதுடன் அதற்கான நடவடிக்கைகளை தாம் எடுப்பதாகவும் கூறினார்.
வடமாகாண மீன்பிடிப் பிரச்சினை குறித்து ஆராய விசேட குழு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான கரைவலைப்பாடுகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டமை மற்றும் அனுமதியில்லாமல் தங்கியிருந்து சட்டவிரோதமான மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றமை உள் ளிட்ட வடமாகாணத்தின் மீன்பிடி பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான குழு ஒன்னை வடமாகாண மீன்பிடி அமைச்சு உருவாக்கியுள்ளதாக துறைசார் அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற முல்லை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சிங்கள மீனவர்க ளின் அத்துமீறல்கள் தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மே ற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி கூட்டத்தில் கடற்றொழில் குறித்து மக்கள் மேலும் சுட்டிக்காட்டுகையில், மாவட்டத்தின் கரையோரப்ப குதிகள் முழுவதும் மிக பெரும்பான்மையான கரைவலைப்பாடுகள் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன. எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அந்த கரைவலைப்பாடுகள் முழுவதும் சிங்கள மக்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு மாற்றிக் கொடுக்க முடியாது.
தமிழ் மக்களுக்குச் சொந்தமான கரைவலை பாடுகள் அனைத்தும் மற்றொருவருக்கு மாற்றிக் கொடுக்கவோ விற்கவோ முடியாது. அவை பரைம்பரையாக உரிமையாளரின் வாரிசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் என்ன அடிப்படையில் சிங்கள மக்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது என தமிழ் மக்களுக்கு இன்றுவ ரையில் தெரியவில்லை. என மக்கள் கூறினர்.
இதற்குப் பதிலளித்த மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களப் பணிப்பாளர் நீண்டகாலம் சிங் கள மக்கள் தொழில் செய்தனர். என்ற அடிப்படையில் அமைச்சின் பணிப்பின் பெயரில் மாற்றிக் கொடுக்கப்பட்ட தாக கூறினார். ஆனால் 1983ம் ஆண்டு மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய பின்னர் அந்தப் பகுதி சூனிய பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே சூனிய பகுதிக்குள் தமிழ் மக்கள் எவ்வாறு சென்று தொழில் செய்ய முடியும்? என மக்கள் கேள்வி எழு ப்பியிருந்தனர். மேலும் நாயாறு பகுதியில் தற்பொழுது 300ற்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து தொழில் செய்கின்றார்கள். குறித்த விடயம் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம்.
ஆனால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் குறித்த மீனவர்கள் அட்டை பிடித்தல், சுருக்கு வலை, சங்குபிடித்தல், வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் உள்ளிட்ட
தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவை அனைத்தும் சட்டவிரோதமான தொழில்களாகும்.
தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவை அனைத்தும் சட்டவிரோதமான தொழில்களாகும்.
மேலும் மாத்தளன் பகுதியில் கணவாய் பிடிப்பதற்கும் சிங்கள மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்வதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு பதிலளித்த மாவட்டக் கடற்றொழில் திணைக்களத்தினர் தாம் நாயாறு பகுதியில் தொழில் செய்வதற்கு 72பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியதாகவும், தற்பொழுது 252பேர் தொழில் செய்வதாகவும் கூறியதுடன், சட்டவிரோதமான தொழில் செய்துள்ள பலரை தாம் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தியதுடன், அவர்களுடைய உடமைகளை அரசுடமையாக்கியதாகவும் கூறினார்.
இந்நிலையில் வடமாகாணத்தின் 4மாவட்டங்களில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்கான குழு ஒன்றிணை மத்திய மாகாண மீன் பிடி அமைச்சுக்கள் இணைந்த உருவாக்கியுள்ளதாகவும் குறித்த குழு 4மாவட்டங்களுக்கும் விரைவில் விஜயம் செய்து மக்களுடைய பிரச்சினைகளை அறிந்து அதற்கமைய தீர்வு காணப்படும் என அமைச்சர் கூறினார்.
புதுக்குடியிருப்பில் தொடர்ந்தும் ஆட்பதிவு நடவடிக்கையில் படையினர்
வடமாகாணத்தில் யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் படையினரின் ஆள்பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முல்லை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மக்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அவ்வாறு பதிவு நடக்கவில்லை என படையினரும், பதிவு நடக்கின்றது என பிரதேச செயலரும் கூறுகின்றனர்.
மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று முன்தினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் அலுவலக த்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மக்கள் மேற்படி குற்றச்சாட்டினை சுமத்தியிருக்கும் நிலையில் படையினரும், பிரதேச செயலரும் மாறுபட்ட விளக்கத்தினை கூறியிருக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக சபையில் பேசப்படுகையில்,
மாவட்டத்தின் மற்றய பிரதேச செயலர் பிரிவுகளில் இவ்வாறான படையினரின் ஆள் பதிவு நடவடிக்கைகள் நடைபெறுவதில்லை. ஆனால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மட்டும் புதிதாக வரும் மக்கள் படையினரால் பதியப்படுகின்றார்கள். அவர்களுடைய பதிவு நிச்சயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்படுகின்றது என மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணை தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் றிஷாட் பதியூதின் ஆகியோர் கூட்டத்தில் படையினர் சார்பில் கலந்துகொண்டிருந்த சிவில் தொடர்பு படை அதிகாரியிடம் அவ்வாறு ஆள் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதன்போது அவ்வாறான ஆள் பதிவு நடவடிக்கைகள் எதனையும் தாங்கள் மேற்கொள்ளவில்லை என படை அதிகாரி பதிலளித்தார். பின்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் அதே கேள்வியை எழுப்பியபோது, அவ்வாறா ன பதிவு மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் வற்புறுத்தலின் பெயரில் பதியப்படவில்லை.
பிரதேச செயலக அதிகாரிகள் பதிவு செய்யும்போது தாங்களும் அதில் இருக்கவேண்டும் என படையினர் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாகவே தாங்கள் படையினரை அனுமித்தாக கூறினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் கட்டாயப்படுத்திக் கேட்கவில்லை என கூறவேண்டாம். தாங்களும் இருக்கப் போகின்றோம், பதிவு எடுக்கப் போகின்றோம் என படையினர் கேட்பதே கட்டாயப்படுத்தல் என்றே கூறவேண்டும் என கூறியதுடன், படையினரின் இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjs7.html
Geen opmerkingen:
Een reactie posten