பொலிஸார் பல்கலைக்கழக மாணவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென கண்டி நீதவான் வசந்த குமார தெரிவித்துள்ளார்.
கண்டி பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில், இவ்வாறு நீதவான் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உரிய சாட்சியங்கள் எதுவுமின்றி பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து தடுத்து வைத்தமைக்காக பொலிஸார், மாணவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
உரிய காரணமின்றி பல்கலைக்கழக மாணவாகள் கைது செய்யப்பட்டனர் எனவே என்னிடமில்லை, சரியென்றால் பல்கலைக்கழக மாணவர்களிடமே மன்னிப்பு கோர வேண்டும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கான காரணங்களை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மாணவர் கைது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று நடைபெற்றது.
இதன் போது பொலிஸார் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியிருந்தனர்.
போலியான குற்றச்சாட்டின் அடிப்படையில் மாணவாகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தக் காரணிகளைக் கருத்திற்கொண்ட நீதவான் பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் செல்ல அனுமதித்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
முகாமைத்துவ பீடமொன்றை அமைக்க அனுமதியளிக்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதியின்றி குடில் அமைத்து போராட்டம் நடத்தியதாக மாணவர்கள் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjs4.html
Geen opmerkingen:
Een reactie posten