[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 02:48.58 AM GMT ]
நீதி அமைச்சினால் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மத்தியஸ்த சபை உறுப்பினர்களை அறிவுறுத்தும் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
நீதி அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து நடத்திய இந்த செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நீதியமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் திருமதி அனுஸ்கா ஏ முனசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திராணி விஸ்வலிங்கம், மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஹெட்ட யாப்பா, மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி வாசனா குணரெட்ன, மத்திய சபை பயிற்றுவிப்பாளர்களான ப.சனாதனசர்மா, வி.சபரிநாயகம், முகமட் உசனாத், மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஹக்மன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மத்தியஸ்த சபைகளின் உறுப்பினர்கள்,சட்ட வல்லுனர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் எதிர்காலத்தில் மத்தியஸ்த சபையின் ஊடாக பொதுமக்களின் பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துவைத்து நீதிமன்றங்களின் சுமைகளை குறைக்கும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு கருத்துகள் பகிரப்பட்டன.
பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து- கணவன்,மனைவி காயம்
மட்டக்களப்பு, கல்லடி, நொச்சிமுனை சிவானந்தா விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 5 மணியளவில் பேருந்து ஒன்றின் பின்புறமாக முச்சக்கர வண்டி மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியின் உரிமையாளரான கல்லடி, பிள்ளையார் ஆலய வீதியை சேர்ந்த சிவநேசலிங்கம் பிரபாகரன் (35வயது). அவரது மனைவி சங்கீதா ஆகியோர் காயமடைந்துள்ளதுடன் அவர்களுடன் பயணம் செய்த மகனுக்கு எதுவித காயமும் ஏற்படவில்லையென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjty.html
ஊவாவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை: அரசாங்கம்- சண்டித்தனத்துக்கு இடமளிக்க மாட்டேன்: ஹரின்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 02:58.54 AM GMT ]
இன்று முதல் எட்டாம் திகதி வரையில் ஊவா மாகாணத்தில் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாகவும் இது அரசாங்கத்தின் ஓர் தேர்தல் பிரச்சார நடவடிக்கை எனவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், இவ்வாறான எவ்வித ஆய்வுகளோ கருத்துக் கணிப்புக்களோ நடத்தப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் அரச உத்தியோகத்தர்களைப் பயன்படுத்தி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஜே.வி.பி, மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த முறைப்பாட்டை கருத்திற் கொண்ட ஆணைக்குழு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளை நேற்று அழைத்து விளக்கம் கோரியிருந்தது.
இந்த விசாரணைகளுக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் அழைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 20ம் திகதி அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், 21ம் திகதி அது குறித்து விசாரணை நடத்தியதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்களை அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
25 ஆயிரத்திற்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளை முதல் ஊவா தேர்தல் பிரச்சாரம்
25 ஆயிரத்திற்கு மேற்பட்ட சமுர்த்தி ஊழியர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நாளை ஊவா மாகாணத்தை நோக்கி பயணமாகின்றார்கள்.
இவர்கள் நாளை முதல் ஆளும் அரசிற்கு ஆதரவாக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக சமுர்த்தி ஊழியர்களின் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் மனித உரிமை ஆணையாளருக்கு அரச ஊழியர்களை கட்சி பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரசு பயன்படுத்தவிருப்பதாக செய்த முறைபாட்டை தொடர்ந்து நேற்று அரசு ஊழியர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட முடியாதென தெரிவிக்கப்பட்டது.
எனினும் இன்று காலை சமுர்த்தி ஊழியர் சங்கம் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்களையும் அரசு விடுமுறை தினமாகியதால் தமது சங்க ஊழியர்கள் அரசுக்கு ஆதரவாக பிரச்சார நடவடிக்கைகளை ஊவா மாகாணத்தில் மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளது.
ஊவாத் தேர்தலில் சண்டித்தனத்துக்கு இடமளிக்க மாட்டேன்
அரசாங்கம் ஊவாத் தேர்தலில் சண்டித்தனம் செய்து வெற்றிபெறலாம் என யோசித்தால் அதற்கு இடமளிக்க மாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை வேட்பாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் அரசியல் கலந்துரையாடல் நிகழ்சியில் நேற்றிரவு கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பாராளுமன்றத்திலிருந்து விலகி வந்தது எனது மக்களுக்காகவே.
எமது மக்களின் வாக்களிப்பு உரிமையைக் குழப்புவதற்கு யார் நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எதிராக எனது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjtz.html
போசாக்கின்மையால் கிளிநொச்சி மாவட்டம் அதிகம் பாதிப்பு
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 03:42.07 AM GMT ]
சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்களின்படி, நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிட கிளிநொச்சி மாவட்டமே போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற போரே இதற்கு காரணமென பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தற்போது 35.9 வீதமான குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தசாப்தத்தில் 17.3 வீதத்தில் இருந்த குழந்தைகளின் போசாக்கின்மை 21.1 வீதமாக அதிகரித்துள்ளது. இதேவேளை, 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 18.4 வீதமாக போசாக்கின்மை குறைபாடு காணப்பட்டதாக பிரதி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நிறைகுறைந்த பிள்ளைகளின் பிறப்பு வீதம் இலங்கையில் திருப்தியாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjt0.html
அவுஸ்திரேலியாவில் ஒரு வருடத்தில் 23 புகலிடக் கோரிக்கையாளர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 04:30.43 AM GMT ]
இந்த அறிக்கையினை அகதி அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
இதற்கு எந்தவிதமான கருத்தையும் வெளியிட மறுத்த அமைச்சர் மொரிசன், தான் புதிதாக அறிமுகப்படுத்திய கொள்கை மிகவும் சிறந்தது என விவாதித்துள்ளார்.
தற்போது மூளை சாவடைந்து மிகவும் மோசமான முறையில் இருக்கும் அந்த புகலிடக் கோரிக்கையாளருக்கு அவரின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு குடும்ப உறுப்பினரை அனுமதிப்பதாகவும் மொரிசன் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் புகலிடம் கோரியவர்களை அடைக்கலம் வழங்காமல் தற்கொலை செய்யும் அளவுக்கு நடத்தும், இந்த அரசு பாரிய மனித உரிமை மீறலை செய்கின்றது என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjt1.html
Geen opmerkingen:
Een reactie posten