எனவே அந்த விமானத்தில் அவர் வன்னிசென்று, தமது நிறுவனம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதை நேரில் பார்வையிட்டு திரும்பியுள்ளார். இதனை சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்து ராஜபக்ஷவின் கூட்டாளி கத்தி படம் எடுப்பதாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்தே சில பிரச்சனைகள் தோன்றியது. குமுதத்தின் நிருபர் , லைக்கா மோபைல் இயக்குனர் சுபாஷை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு, சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர் , தனக்கும் ராஜபக்ஷவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும், ராஜபக்ஷ பணத்தில் தான் கத்தி படம் உருவாகிறது என்பது ஒரு போலிப் பிரச்சாரம் என்றும் கூறியுள்ளார்.
ஈழத் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் மற்றும் பல வளர்சியைக் கண்டுள்ள லைக்கா மோபைல் நிறுவனம், ராஜபக்ஷவிடம் ஏன் பணத்தைப் பெறவேண்டும் ? அன் நிறுவனத்திடம் போதிய பணம் உண்டு எனவும் , தமது மாத வருவாய் 100 மில்லியன் பவுன்சுகளை தாண்டும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற போலிப் பிரச்சாரத்தை ஒரு சிலரே தூண்டி விடுவதாகவும், இதனால் தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் கைகள் ஓங்கக் கூடாது என்று நினைக்கும் சில குறுகிய மனப்பாண்மை உள்ளவர்களே இதனைச் செய்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை நடந்த அனைத்தையும் தாம் உணர்வாளர் சீமான் அவர்களுக்கு விளக்கியுள்ளதாகவும் லைக்கா மோபைல் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் பலர் நிலைமையைப் புரிந்துகொண்டு, கத்தி படத்திற்கு ஆதரவினை தருவதாக கூறியுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது. சுபாஷ் அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளதோடு, கத்திப் படகுழுவினருக்கும் புது உட்சாகத்தை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 3 கோடி இளைஞர்கள் விஜய் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஈழத் தமிழ் உணர்வாளர்களாக இருப்பதும், ஈழத் தமிழர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் ஒரு விடையமாக அமையும். எதிரிகளை நாமே உருவாக்கி, எம்மை அன்னியப்படுத்துவதை விட, அனைவரையும் அரவணைத்து சக்திமிக்கவர்களாக நாம் இருந்தால் மட்டுமே எமது விடுதலைப் போராட்டம் வெற்றியடையும்.
தமிழகத்தில் இருந்து கிடைக்கும் பெரும் பலமே , ஈழத் தமிழர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். அந்தப் பலம், அரசியல்வாதிகள் ஊடாக வரலாம், உணர்வாளர்கள் ஊடாக வரலாம், ஏன் நடிகர்கள் ஊடாக கூட கிடைக்கலாம். மாபெரும் சக்தி ஒன்றை அது திரட்டவல்லதாக அமையும்.
http://www.athirvu.com/newsdetail/994.html
Geen opmerkingen:
Een reactie posten