தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 september 2014

இலங்கையர் பாக்கிஸ்தான் உளவாளியாம்: முழுக்க முழுக்க கியூ பிரிவின் சோடிப்பா ?

இலங்கையை சேர்ந்த தமிழராண அருண் செல்வராசன் என்பவர் கைதாகியுள்ளார். இவர் பாக்கிஸ்தான் நாட்டுக்காக இந்தியாவில் உளவு பார்த்தார் என்று தமிழக கியூ பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை இவர் ஒரு முஸ்லீம் அல்ல என்பதும் தெளிவாகத் தெரிந்துள்ளது. அருண் செல்வராசா நல்லதொரு குடும்பத்தில் பிறந்தவர் என்றும், அவர் குடும்பம் வறுமைக் கோட்டில் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரும் செல்வந்தராக இல்லாவிட்டாலும், அக் குடும்பம் படித்த பல அங்கத்தவர்களை கொண்டது என்றும், மிகவும் கண்ணியமான முறையில் அவர்கள் வாழ்ந்து வருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.
எனவே பணத்தேவை எதுவும் அருண் செல்வராசாவுக்கு இருக்கவில்லை. அத்தோடு அவர் இந்தியா சென்று சிறிய வியாபாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த அந்த துறையில் உள்ள போட்டி புறாமை காரணமாகவே அவரை யாரோ செட்-டப் செய்து மாட்டிவிட்டுள்ளார்கள் என்றும், சில ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை இவர் ஒரு பெண்னுடன் காதல்வயப்பட்டுள்ளார். குறித்த அந்த பெண் சென்னையில் உள்ளார். அவரையும் கியூ பிரிவு பொலிசார் விட்டுவைக்கவில்லை. அருண் இந்தப் பெண்ணை திருமணம் செய்யவும் முயற்சித்துள்ளார். பாக்கிஸ்தானுக்கு உளவு பார்க்கும் ஒரு நபர், இந்தியப் பெண்ணை திருமணம் செய்து இந்தியாவிலேயே செட்டிலான நினைத்திருப்பாரா ?
என்றாவது ஒரு நாள் தனக்கு ஆபத்து வரும் என்று அவருக்கு தெரியாதா ? என்றது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. இருப்பினும் எவர் எவ்வாறு இருப்பார்கள் என்பது எவராலும் செல்லமுடியாது. முழுமையான விசாரணைகள் நடந்து முடிந்த பின்னரே, எதனையும் உறுதியாக கூறமுடியும். அப்படி ஒருவேளை அருண் குற்றமற்றவர் என்று தெரியவந்தாலும், கியூ பிரிவினர் அவரை வெளியே விடுவார்களா ? இல்லை தங்கள் பிழைகளை ஒத்துக்கொள்வார்களா என்பதும் சந்தேகம் தான்.
http://www.athirvu.com/newsdetail/993.html


Geen opmerkingen:

Een reactie posten