அமரர் வேலுப்பிள்ளை குணரத்தினத்தின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட பொதுக்கிணறு மக்களின் பாவனைக்கு கையளிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 03:13.20 PM GMT ]
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் ஏராளம் கிராமங்கள் தண்ணீருக்கு பல்வேறு இன்னல்கள் மத்தியில் அலையும் நிலையில் மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு பா.உறுப்பினர் சி.சிறீதரனால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதற்கு இணங்க, யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த அமரர் வேலுப்பிள்ளை குணரத்தினம் ஞாபகார்த்தமாக லண்டனில் வசிக்கும் அவரது மகன் குணரத்தினம் கிருபாகரனால் கிளிநொச்சி அக்கராயன் கரித்தாஸ் குடியிருப்பு மக்களுக்காக நல்ல நீர் நிறைந்த பொதுக்கிணறு ஒன்று அமைக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் பணிப்பிற்கு அமைய அவரது செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உப தலைவருமான பொன்.காந்தனின் மேற்பார்வையில், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான சு.தயாபரன், சி.சுப்பையா, அக்கராயன் பிரதேச கட்சி அமைப்பாளர் கரன், அக்கராயன் கரித்தாஸ் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பெருமாள் பழனிச்சாமி
மற்றும் நிர்வாகத்தினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மக்கள் பங்களிப்புடன் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சு.தயாபரன் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில், பா.உறுப்பினர் சி.சிறீதரனால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேசபை உறுப்பினர் சி.சுப்பையா, அக்கராயன் கரித்ததாஸ் குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் பழனிச்சாமி, செயலாளர் ஜெகன், கட்சியின் மாவட்டக் கிளையின் உபதலைவரும் பா.உறுப்பினரின் செயலாளருமான பொன்.காந்தன், இளைஞர் அணியின் செயலாளர் சர்வானந்தா, கட்சியின் அக்கராயன் கிளைத் தலைவர் சி.கனகசபாபதி (சிறி), செயலாளர் கதிர்மகன், உறுப்பினர்கள், மாதர்சங்க உறுப்பினர்கள் கரித்தாஸ் குடியிருப்பு விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மக்கள் கலந்துகொண்டனர்.
அங்கு பொதுக்கிணற்றை அமைப்பதற்கு தனது சொந்த நிலத்தில் ஒரு பகுதியை அன்பளிப்பு செய்த ராயு என்பவருக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது.
அதன்பின், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பழனிச்சாமி கருத்துரைக்கையில்,
காலமறிந்த எமது கிராம மக்களுக்காக செய்யப்பட்ட பேருதவியாக இந்த பொதுக்கிணறு எமது மக்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அதற்காக அமரர் குணரத்தினம் அவர்களின் மகன் கிருபாகரனுக்கு எமது மக்கள் சார்பில் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மிகவும் நல்ல மன்தோடு இந்த காரியம் செய்யப்பட்டுள்ளதால் இந்த கிணற்றில் இந்த பெருங்கோடையிலும் வற்றாத ஊற்றொன்றின் மூச்சினால் நிறைந்த நீர் கிடைத்திருக்கின்றது.
இந்த கிணற்றின் மூலம் எமது கிராமத்தின் பெருமளவு நீர்ப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. இத்தோடு இங்கே நாம் எமது மக்கள் சார்பாக விடக்கூடிய சில கோரிக்கைகள் உண்டு.
அதாவது எமது கிராமத்துக்கு ஏற்று நீர்ப்பபாசன வசதியை ஏற்படுத்தி தருவதன் மூலம் எமது கிராமத்தின் வறுமைப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.
இப்போது சீரற்ற இலக்குகளோடு வழங்கப்பட்ட கடன்களாலும் சலுகைகளாலும் எமது மக்கள் கடனாளிகள் ஆக்கப்பட்டு இப்போது துன்பங்களை சுமக்கின்றார்கள்.
எமது கிராம மக்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவித்தார்.
இங்கு பொதுமக்கள் பாவனைக்கு பொதுக்கிணறை கையளித்து உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக எமது கிராமங்களில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் சாந்தபுரம், கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அக்கராயன் போன்ற பகுதிகளுக்கு பௌசர் மூலம் எம்மால் முடிந்த வரைவில் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் வீடுவீடாக நீர் வழங்கும் காரியத்தை ஆற்றி வருகின்றோம்.
அத்துடன் நெடுங்காலம் நிலைக்கும் வளமாக பொதுக் கிணறுகளையும் அமைத்து வருகின்றோம். அந்த வகையில்தான் இன்று அச்சுவேலி பத்தமேனி அமரர் வேலுப்பிள்ளை குணரத்தினம் ஞாபகார்த்தமாக லண்டனில் வசிக்கும் அவரது மகன் கிருபாகரனால் நல்லெண்ணத்தோடு வழங்கப்பட்ட நிதியில், உங்கள் கிராமத்தில் இந்த கிணறு அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
எங்களால் இக்காலத்தில் செய்யக்கூடிய உதவியாக அமைகின்றது. அத்துடன் இங்கு கிராம அவிபிருத்தி சங்கம் ஆலய சபையால், விளையாட்டுக்கழகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் தீர்வுகள் காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUep5.html
குருணாகலில் சிறுமியை கடத்தியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 03:53.15 PM GMT ]
குருணாகல் கனேவத்த பிரதேசத்தில் தமாரா ஹேஷாலி விஜேகோன் என்ற 4 வயது சிறுமியை கடத்திச் சென்ற பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 24ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேக நபர், குற்ற விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
சிறுமியை இரண்டு தினங்களாக மறைத்து வைத்திருந்த காட்டுப் பகுதிக்கு இன்று காவல்துறையினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு முன்னர் இதேபோன்ற சம்பவம் ஒன்றுடன் சந்தேகநபர் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அங்கும் சிறார்களை கடத்துவதற்கு சந்தேக நபர் மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அஜித் ரோகண தெரிவித்தார்.
தமது வீட்டில் குழந்தை இருப்பதை ஏனையவர்கள் அறியாதிருப்பதற்காக அதன் தலைமுடியை அகற்றியதாகவும் கிறீஸ் காமினி என்ற பிரதான சந்தேக நபர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதுதவிர, குழந்தையை தாமே வளர்த்து அதனூடாக ஏதேனும் பயனைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த கடத்தலை மேற்கொண்டதாகவும் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUep6.html
இலங்கையில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலையே!- பிரித்தானிய முன்னாள் அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 11:38.41 PM GMT ]
பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே முன்னாள் அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் மீது ஓர் சர்வதேச விசாரணைக்கான மேலதிக அழுத்தத்தை பிரித்தானியா ஏற்படுத்த வேண்டுமெனவும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடைசெய்வதன் மூலம் தமிழர்களின் மீது தீவிரவாதப் பட்டத்தை கட்டும் இலங்கை அரசின் நடவடிக்கையை எதிர்க்குமாறு கோரவும் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் பிரிந்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த சந்திப்பின்போது கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் அவர்கள்,
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்காமைக்கு தமது கண்டனத்தையும் வெளியிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten