தென் அதிவேக நெடுஞ்சாலைக்கு உரிய தரத்தில் நிர்மாணிக்கப்படவில்லை: ஐ.தே.க வழக்குத் தாக்கல் (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:38.09 AM GMT ]
அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும கால் ஒன்றை இழக்க நேரிட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியும் காயமடைந்ததுடன், வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது.
வீதிக்கு ஏற்பட்ட சேதமான 550,000 ரூபாவினை செலுத்தி வாகனத்தை மீட்டுச்செல்ல முடியும் என வீதி அபிவிவருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உரிய தரத்தில் பாதை அமைக்கப்படாமையினால் விபத்து ஏற்பட்டதாகவும் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
நியாயம் என்றால் தமக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமே தவிர, வீதி அபிவிருத்தி அதிகார சபை தம்மிடம் நட்டஈடு கோருவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேஸ்வரம் மிருக பலி பூஜையை முழுமையாக இரத்து செய்யுமாறு தேசிய சங்க சம்மேளனம் மேன்முறையீடு
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மிருக பலி பூஜைகளை முழுமையாக தடை செய்யுமாறு கோரிய தேசிய சங்க சம்மேளனம் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
மிருக பலி பூஜையை முழுமையாக தடை செய்யுமாறு கோரி தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட்டு தேசிய சங்க சம்மேளனம் மேன்முறையீடு செய்துள்ளது.
இந்த மேன்முறையீடு குறித்த விசாரணைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
அனுமதிப் பத்திரம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு மிருக பலி பூஜைகளை செய்ய முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அறிவித்திருந்தன.
எனினும் இந்த தீர்ப்பு குறித்து திருப்தி அடையாத தேசிய சங்க சம்மேளனம், முற்றாக அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரி மற்றுமொரு மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றில் செய்துள்ளது.
அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொண்டோ அல்லது இல்லாமலோ மிருக பலி பூஜைகளில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் இன்று மொனராகல மாவட்டத்திற்கு விஜயம்
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் இன்று மொனராகல மாவட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஊவா மாகாணத்தில் அதிகளவு தேர்தல் வன்முறைகள் இடம்பெற்று வரும் மாவட்டமாக மொனராகல மாவட்டம் கருதப்படுகின்றது.
நிலைமைகளை நேரில் பார்வையிடும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன், மொனராகல மாவட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை என்.கே. இளங்கக்கோன் சந்திக்க உள்ளார்.
அமைதியான முறையில் தேர்தல்களை நடாத்துவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக 11000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தல்களுடன் தொடர்புடைய 63 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவற்றில் 42 முறைப்பாடுகள் மொனராகல மாவட்டத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
தேர்தல் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கேரள கஞ்சா வியாபாரி விடத்தல் தீவில் கைது
கேரள கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருவர் விடத்தல் தீவு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 வயதான இந்த நபர் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சாரதியுடன் கெப் வண்டியில் சென்றுகொண்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வண்டியில் இருந்து 22 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfr1.html
ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு பணிகளில் குழப்பங்களை ஏற்படுத்த மேற்குலக நாடுகள் முயற்சி: வீரவன்ச
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:42.13 AM GMT ]
அண்மையில் மாளிகாவத்தை பிரதீபா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை, தமிழ் பிரிவினைவாதம் இல்லாமல் செய்யப்பட்டமை என்பனவற்றை மேற்குலக நாடுகளினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதனால் மேற்குலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.
இறுதிக்கட்ட போரின் போதும் கப்பல் ஒன்றின் மூலம் புலித் தலைவர்களை மீட்பதற்கு முயற்சித்தனர்.
இலங்கை அரசாங்கம் புலித் தலைவர்களை ஒப்படைக்கும் என கருதினார்கள். எனினும், தமிழ் பயங்கரவாத கனவை படையினர் கலைத்து விட்டனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இராணுவத் தளபதி ஒருவரை போட்டியிடச் செய்தனர்.
ஒன்றிரண்டு லட்சம் வாக்கு வித்தியாசம் என்றால் கள்ள வாக்குகள் எனத் தெரிவித்து பாரிய போராட்டமொன்றை நடத்த சூழ்ச்சி செய்யப்பட்டது.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 18 லட்சத்திற்கு மேல் கூடுதல் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வெற்றியீட்டினார்.
இதனால் கிளர்ச்சி செய்யும் சூழ்ச்சித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இம்முறை வேறும் ஓர் சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிரித்து எவரும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் சூழ்ச்சி திட்டமொன்று கட்டவிழ்த்து விடப்பட உள்ளது.
எவரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன் போது கிளர்ச்சிகளை ஏற்படுத்தி குழப்பங்களை விளைவித்து ஆட்சிக் கவிழ்க்க முயற்சிக்கப்படுகின்றது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfr2.html
Geen opmerkingen:
Een reactie posten