தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

விமான நிலைய டாக்ஸி சேவைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதில் என்ன பிரச்சினை? சோபித தேரர்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:23.33 AM GMT ]
முழு நாடுமே எதிர்க்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதில் என்ன பிரச்சினை காணப்படுகின்றது என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தவைர் மாதுலுவே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்லா தேர்தல்களின் போதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைiயை ரத்து செய்வதாக வாக்குறுதி அளிக்கப்படுகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமையினால் முழு நாடுமே அநீதிக்கு உள்ளாகியுள்ளது.
நாட்டின் உன்னதமான சட்டமாக அரசியல் அமைப்பு கருதப்படுகின்றது.
1978ம் ஆண்டு அரசியல் அமைப்பிற்கு அமைய நிறைவேற்று அதிகாரத்திற்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடாளுமன்றிற்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய அவசியம் நிறைவேற்று அதிகாரத்திற்கு கிடையாது.
அன்று முதல் இன்றுவரையில் நிறைவேற்று அதிகாரத்திற்கு சர்வமத தலைவர்கள், இடதுசாரி கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
மஹிந்த சிந்தனையிலும் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இலகுவில் இல்லாதொழிக்க முடியும்.
பொலிஸ் திணைக்களம், நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்துமே அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய விரும்பும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இன மத பேதங்களைக் களைந்து அனைவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துசெய்யும் முயற்சியில் இணைந்து கொள்ள வேண்டுமென மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfq7.html
மட்டக்களப்பில் மோட்டார் குண்டு விற்பனை செய்து ஐஸ்கிறீம் பெற்றுக் கொள்ள முயற்சித்த சிறுவர்கள்?
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:28.25 AM GMT ]
மட்டக்களப்பில் மோட்டார் குண்டு விற்பனை செய்து ஐஸ்கிறீம் பெற்றுக்கொள்ள முயற்சித்த சிறுவர்கள் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளன.
அண்மையில், ஐஸ்கிறீமிற்காக சிறுவர்கள் மில்லிமீற்றர் 80 ரக மோட்டார் குண்டு ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
பழைய இரும்புப் பொருள் வர்த்தகர் ஒருவரிடம் இந்த மோட்டார் குண்டு விற்பனை செய்யப்படவிருந்தது.
மட்டக்களப்பு தாண்டியடி பிரதேசத்தில் பழைய இரும்பு வழங்குவோருக்கு ஐஸ்கிறீம் வழங்கும் நடைமுறை காணப்படுகின்றது.
எனவே குறித்த மோட்டார் குண்டு ஒர் இரும்புப் பொருள் என நினைத்து சிறுவர்கள், அதனை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் அறிந்து கொண்ட விசேட அதிரடிப் படையினர் வர்த்தகரிடமிருந்து குண்டை மீட்டுள்ளனர்.
அண்டிய பிரதேசமொன்றிலிருந்து மேலுமொரு மோட்டார் குண்டும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குண்டுகளுடன் விளையாடிய சிறுவர்கள் கடந்த காலங்களில் காயமடைந்த ஆபத்துக்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfry.html
வடமாகாண சபையின் யோசனை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்கிறது
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:33.57 AM GMT ]
அண்மையில் வடமாகாண சபையில் யோசனைகள் குறித்து மத்திய குழு கூடிய ஆராய்ந்த பின்னரே தமது முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவிக்கவுள்ளது
கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், வடமாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட யோசனை குறித்து தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் குழுவை இலங்கைக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டு;ம் என்று வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தம்மால் தனிப்பட்ட ரீதியில் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், குறித்த தீர்மானம் அடுத்த வாரம் தமது கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு மாகாண சபையும் இலங்கையின் அரசியலமைப்பை மீறிச்செயற்பட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfrz.html
விமான நிலைய டாக்ஸி சேவைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 02:36.09 AM GMT ]
விமான நிலைய டாக்ஸி சேவைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரகர்களின் ஊடாக நடத்தப்பட்டு வரும் வாடகை வாகன சேவையைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாடகை டாக்ஸிகளைப் பயன்படுத்திய பயணிகள் கடந்த காலங்களில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதிகளவில் பெண்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். சில பெண்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
பெண்களிடமிருந்து பணம்,  பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறையான வாடகை வாகன சேவைகள் காணப்படுகின்றன.
முகவர்களின் ஊடான வாகன சேவைகளை விடவும் இந்த வாகன சேவை நிறுவனங்கள் நம்பகமானவை.
விமான நிலையத்திலிருந்து வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்தும் போது நிதானமாக செயற்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfr0.html

Geen opmerkingen:

Een reactie posten