வவுனியாவில் உள்ள ஒரு 16 வயது நிரம்பிய சிறுவனுக்கு இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது ? 16 வயதுச் சிறுவனுக்கு அரசியல் ஞானம் எங்கிருந்து வந்தது ? இவர் முக நூலில் எழுதியுள்ள அரசியல் விமர்சனத்தை வாசித்தால், நிச்சயம் ஒரு 16 வயதுடைய சிறுவன் இப்படி எழுதி இருக்க முடியாது என்பதனை அனைவரும் உணருவார்கள். அத்தோடு இச்சிறுவன் ஒன்றும் ஊடகம் தெரிந்தவனும் அல்ல. கம்பியூட்டரில் தமிழில் டைப் அடிக்கவே இவருக்கு தெரியாது என்பது தான் உண்மையாகும். ஆனால் இவரை ஏன் பொலிசார் கைதுசெய்தார்கள் என்று கேட்க்கிறீர்களா ?
அரசியல் வாதிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்தே, குறித்த பேஃஸ் புக் கணக்கை முடக்க பொலிசார் முனைந்துள்ளார்கள். இச்சிறுவனின் பேஃஸ் புக் கணக்கை யாரோ பிழையாக பயன்படுத்தி இருக்கலாம், இலையென்றால் இது பொலிசாரின் ஒரு கண் துடைப்பு நாடகமாக இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். வெளியாகியுள்ள போட்டோ கூட உண்மையான போட்டோ அல்ல என்றும், இதில் உள்ள சிறுவன் தான் வவுனியா பெடியன் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் வவுனியாவில் உள்ள மக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். கைதான சிறுவனின் உறவினரோடு நாம் நேரடியாக தொடர்புகொண்டபோதே மேலதிக விபரங்களை நாம் பெற்றுள்ளோம்.
http://www.athirvu.com/newsdetail/907.html
Geen opmerkingen:
Een reactie posten