அமெரிக்காவின் அதி நவீன ஸ்பை விமானம் ஒன்றை, ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வைத்திருக்கிறார்கள் என்ற அதிர்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த இந்த ஆளில்லா விமானம் 2 ஏவுகணைகளை தாங்கிச் செல்ல வல்லது. ஆனால் அதில் உள்ள 2 ஏவுகணைகளும் பாவிக்கப்பட்ட நிலையில், அது இல்லாமல் வெறும் கமராவுன் இது உள்ளது. இதனை எவ்வாறு தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு தமது ஆளில்லா விமானம் ஒன்றை தாங்கள் இழந்துவிட்டதாக அமெரிக்காவும் இதுவரை அறிவிக்கவே இல்லை. இது தொடர்பாக அவர்கள் மூச்சும் காட்டவில்லை. இன் நிலையில் தான் குறித்த தகவல் வெளியாகி உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது கைப்பற்றியுள்ள விமானத்தை, தீவிரவாதிகள் தமதாக்கிக் கொண்டுள்ளார்கள். இதனால் இந்த விமானம் பறப்பில் ஈடுபடும் வேளைகளில் அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் அதனை கொண்டுவர முடியாமல் உள்ளது. அதன் கட்டுப்பாட்டை மாற்றியமைத்து தீவிரவாதிகள் தாம் வேவு பார்க இதனை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது. அண்மையில் தீவிரவாதிகள் ஒரு ஏர்-போட்டை கைப்பற்றி இருந்தார்கள். இத்தாக்குதலின் போது அமெரிக்க பாணியில், இதனை மேலே பறக்கவிட்டு அது தரும் துல்லியமான தகவலைப் பெற்று தான் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்று மேலும் தெரிய வருகிறது. இதனால் அண்டைய நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
அமெரிக்காவின் தயாரிப்பு விமானமா ? அது ராடர் திரையில் வேறு விளாதே ! அப்படி இருக்க இது எவ்வாறு தீவிரவாதிகள் கைகளில் சேர்ந்தது என்று பல நாடுகள் அச்சமடைந்துள்ளது. இனி இதனை வைத்து என்ன ஆட்டம் எல்லாம் காட்டப்போகிறார்களோ தெரியவில்லை. குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாகப் போயுள்ளது இந்த விடையம். குதிரை சும்மாவே வேகமாக ஓடும். இதில் கொம்பு முளைத்தால் சொல்லவா வேண்டும் ?
ஓபாமாவின் ரகசிய பாதுகாப்பு பிரிவினர் தேடிவரும் மர்மமான கார் எங்கே நிற்கிறது ?
[ Sep 01, 2014 06:53:28 PM | வாசித்தோர் : 2705 ]
ஆனால் அவர் அங்கே செல்ல முன்னரே, குறிப்பிட்ட காரில் யாரோ அங்கே சென்று அவருக்காக காத்துக்கொண்டு இருந்துள்ளார்கள். காரில் இருந்தவர்கள் யார் ? அவர்கள் எவ்வாறு அதிபர் ஓபாமாவின் பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த முற்பட்டார்கள் என்ற தகவலை வெளியிட, சீக்கிரெட் சர்விஸ் மறுத்துவிட்டது. ஆனால் குறித்த அந்த ஜெட்டா வகை காரை எங்கேயாவது கண்டால் உடனே தம்மை தொடர்புகொள்ளுமாறு அவர்கள், லோக்கலில் உள்ள பொலிசாரை உஷார் படுத்தி உள்ளார்கள். இந்த காரில் இருந்தவர் ஒபாமாவை குறிவைத்து , தாக்குதல் நடத்த இருந்தாரா என்று சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இது இவ்வாறு இருக்க குறித்த காரை இன்றைய தினம்(01) தாம் கண்டு பிடித்துள்ளதாக நியூபோட் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உண்மையில் சீக்கிரெட் சர்விஸ் கூறியது போல அந்த கார் நடுத்தெருவில் அனாதரவாக கிடந்துள்ளது. இதனை யார் பாவித்தார்கள் என்று கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதனை சமீபத்தில் வாங்கிய நபர் ஒரு அமெரிக்கரே இல்லை. அதாவது பொய்யான பெயரில் அந்த கார் வாங்கப்பட்டுள்ளது எனவும் மேலும் அறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அதிபர் ஓபாமவின் பாதுகாப்பு மேலும் ஒரு அடுக்கால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க அதிபர் குறித்த அந்த இடத்திற்கு செல்வார், எந்த வழியால் செல்வார் என்பது போன்ற தகவல்களும் இந்த காரில் இருந்த நபருக்கு முன்னரே தெரிந்தும் உள்ளது. எனவே காரில் இருந்த நபர் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது. உயர் மட்ட தொடர்புகளை கொண்டவராக இருக்கவேண்டும் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten