[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 04:48.18 PM GMT ]
மழை, வெள்ளம் ஏற்படும் போது மழையை நிறுத்தவும் வறட்சிக் காலத்தில் வெயிலை நிறுத்தவும் அரசாங்கத்தினால் முடியாது.
எனினும், மக்கள் வாழ்க்கையை எடுத்துச் செல்ல நிவாரணங்கள் வழங்க முடியும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மக்கள் நம்ப வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டில் நிலவி வரும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்கப்படும்.
நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முயற்சி எடுக்கப்படும். தொடர்ச்சியாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் கனேவல்பொலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlw5.html
யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 05:00.53 PM GMT ]
அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டு மீனவ உறவுகளின் படகுகளை சிறைபிடிக்க இலங்கை அரசுக்கு தாமே ஆலோசனை வழங்கியதாக தமிழின துரோகி சுப்பிரமணியன் சுவாமி திமிர்த்தனமாக பேட்டி அளித்திருப்பதற்கு எனது மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை சென்ற போது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள், தொழிலாளர்கள் அவர்களை கைது செய்தால் சிறையில் அடைத்து விடுவித்துவிடுங்கள். ஆனால் கப்பல்களை சிறைபிடித்துக் கொள்ளுங்கள். அதன் முதலாளிகள் பணக்காரர்கள்.. மீன் பிடிப்பவர்கள் அதற்குச் சொந்தக்காரர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு அமைந்தது முதல் தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி இந்தியாவின் ஏகப் பிரதிநிதி போல சிங்கள பேரினவாத அரசுடன் கை குலுக்குவதும் அடிக்கடி இலங்கைக்கு சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற இராணுவக் கருத்தரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக போய் கலந்து கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இவரது ஒவ்வொரு நடவடிக்கையுமே தமிழக நலன்களுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிரானதாகவே இருக்கிறது என்பதை ஒவ்வொரு முறையும் சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்து வருகிறோம்.
இதன் உச்சபட்சமாக தமிழ்நாட்டு மீனவ உறவுகளின் வாழ்வாதாரமான படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு அதை பகிரங்கமாக திமிர்த்தனமாக பேட்டியும் கொடுத்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
தமிழக மீனவ உறவுகளின் படகுகளுக்கும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் கப்பல்களுக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தலையிட்டு தமிழினத்துக்கு துரோகத்தை இழைத்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
இந்தியாவில் ராஜபக்சவின் பிரதிநிதியைப் போலவே அகந்தையாக ஆணவமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சுப்பிரமணியன் சுவாமியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதற்கு எதிராக சிங்களப் பேரினவாத அரசுடன் தொடர்ந்தும் கை குலுக்கிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
இந்த சுப்பிரமணியன் சுவாமி இந்தியாவின் வெளியுறவு அமைச்சரா? இந்தியாவின் வெளியுறவுத் துறை பிரதிநிதியா? யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? இவர் என்ன இந்த தேசத்தின் அறிவிக்கப்படாத பிரதமரா? யார் இந்த அதிகாரத்தை சுப்பிரமணியன் சுவாமிக்கு கொடுத்தது என்பதை பாரதிய ஜனதா கட்சியும் மத்திய அரசும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழினத்துக்குத் துரோகம் செய்கிற உலகத் தமிழினத்தையே சிங்களவனிடம் காட்டிக் கொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் இந்த தமிழினத் துரோகியின் திமிர்த்தனத்துக்கும் ஆணவத்துக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தக்க பாடம் புகட்டும் என்று மிகக் கடுமையாக எச்சரிக்கிறேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlw6.html
Geen opmerkingen:
Een reactie posten