[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 12:19.11 PM GMT ]
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், பழுதடைந்த படகினையும் அதில் இருந்த மீனவர்கள் செபஸ்டியான், டோனா, ஜான்சன், செல்வராஜ், கிளாடி, பிரான்சிஸ் ஆகிய 6 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.
23 வருடமாக மட்டு.சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுகூரலை மேற்கொண்டுவந்த எங்களுக்கு இந்த ஆண்டு தடையை ஏற்படுத்தியது மிகவும் வேதனைக்குரிய விடயம் என அதிபரும் சத்துருக்கொண்டான் கண்ணகியம்மன் ஆலய தலைவருமான க.சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர்களும் தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கை சிறையில் 15 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிடிபட்டுள்ள 6 மீனவர்களும் சிறை வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இலங்கை சிறையில் 15 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிடிபட்டுள்ள 6 மீனவர்களும் சிறை வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhu1.html
மட்டு.சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு கூரலுக்கு தடை விதிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 12:43.02 PM GMT ]
சத்துருக்கொண்டானில் 1990ம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்ட 184 பொதுமக்களின் நினைவு கூரல் நிகழ்வுகள் சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அருகே நடைபெறவிருந்தது.
இந்த நிகழ்வுக்கு பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை விதித்திருந்ததுடன் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து நினைவுகூரல்கள் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டதுடன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதன்போது அதிபரும் சத்துருக்கொண்டான் கண்ணகியம்மன் ஆலய தலைவருமான க.சிவக்கொழுந்து, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதிபரும் சத்துருக்கொண்டான் கண்ணகியம்மன் ஆலய தலைவருமான க.சிவக்கொழுந்து, சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் நிகழ்வினை நடத்துவதற்கு நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இதன் காரணமாக இன்று நடத்தவிருந்த நினைவுதின நிகழ்வுகள் கைவிடப்பட்டு சத்துருக்கொண்டான் கண்ணகியம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் படையினர் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுவந்தது. யுத்த காலத்திலும் படையினர் எங்களுக்கு ஆதரவு வழங்கினர். ஆனால் இன்று பொலிஸார் இதனை தடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எமது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் நடத்தப்படும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வினை தடுத்தமையானது அடிப்படை மனித உரிமை மீறல் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
கடந்த 23 வருடமாக நடைபெற்றுவந்த ஒரு நிகழ்வினை பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடுத்தமையானது கவலைக்குரியதுடன் கண்டனத்துக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே இதனை தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரி ஹெட்டயாராட்சி, முன்னறிவித்தல் இன்றி மேற்கொள்ளப்பட்டமை காரணமாகவே நீதிமன்றின் ஊடாக இந்த நிகழ்வினை தடைசெய்ததாகவும் எதிர்வரும் காலங்களில் முன்னறிவித்தல் பெற்று நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது அப்பகுதியில் பெருமளவான படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
மட்டக்களப்பு பொலிஸாருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே சத்துருக்கொண்டானில் இன்று மாலை முறுகல் நிலை ஏற்பட்டது.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களில் 1990.09.09 அன்று கொல்லப்பட்டவர்களின் 24 ஆவது நினைவு தினம் செவ்வாய்கிழமை அனுஷ்டிக்க ஏற்பாடாகியிருந்தது.
இந்நிலையில் கொக்குவிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு உறவினர்கள் சகிதம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிட்டி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தச் சென்றபோது பொலிஸார் தடுக்கவே முறுகல் நிலை ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றினால் பொதுமக்கள் கூடும் இடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது மக்களிற்கும் அண்டிய சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படாது தடுக்கவே இத்தடை விதிக்கட்டுள்ளது என பொலிசார் நீதிமன்ற உத்தரவை வாசித்துக் காட்டினர்.
அப்போது நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலயத்தில் நாங்கள் சுடர் ஏற்றுவோம். உங்களால் தடுக்க முடியாது எனத் தெரிவித்து, கொக்குவில் வீரம்மா காளியம்மன் ஆலயத்தில் 24 ஆண்டுகளை நினைவு கூர்ந்து 24 சிட்டிகளை ஏற்றி மௌன அஞ்சலி தெரிவித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் மற்றும் குறிப்பிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்./P>
குறித்த தினத்தில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள், தாய்மார்கள், வயோதிபர்கள் 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களின் நினைவுதினம் ஒவ்வொரு வருடமும் அதே தினத்தில் நினைவு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கருத்துக்கூறிய பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
மட்டக்களப்பு மாவட்டத்திலே பல படுகொலைகள் நடந்தேறி இருக்கின்றது. இந்தப் படுகொலைகளில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி சிங்கள இராணுவத்தினரால்
துடிக்கத்துடிக்க படுகொலை செய்யப்பட்டு கிடங்குகளில் உயிருடன் போட்டு எரித்த வரலாறுகளே அதிகம்.
துடிக்கத்துடிக்க படுகொலை செய்யப்பட்டு கிடங்குகளில் உயிருடன் போட்டு எரித்த வரலாறுகளே அதிகம்.
அவர்களின் நினைவாகக்கூட ஒரு சுடரினை ஏற்றி உயிர்நீத்த தமிழ்மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக முடியாத நிலையிலே இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும்
தமிழர்கள் துன்பதுயரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
தமிழர்கள் துன்பதுயரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் தமிழர் பிரதேசங்களில் நன்கு திட்டமிட்ட முறையில் தமிழ் இனப்படுகொலைகள் நடந்தேறி இருக்கின்றது. அந்த படுகொலைகளில் உயிர்நீத்த உறவுகள் இந்த நாட்டு பிரஜைகள் என்பதனை இந்த நாட்டு அரசாங்கம் மறந்து செயற்படுவது ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் வெட்கக்கேடான விடயமாகவே
பார்க்கவேண்டி இருக்கின்றது.
பார்க்கவேண்டி இருக்கின்றது.
கடந்த போராட்ட வரலாற்றில் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய மக்களும், ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட சிங்கள மக்களும் சுதந்நதிரமாக
அவர்களை நினைவு கூற முடிகின்றது. அவர்களுக்கு எந்தத்தடையும் இல்லை. ஆனால் இலட்சக்கணக்கான உறவுகளை இழந்து தமிழ் மக்களுக்காக வேண்டி அவர்களின் நினைவு கூறமுடியாத அளவிற்கு இன்று இந்தத்தமிழ் இனம் இலங்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
அவர்களை நினைவு கூற முடிகின்றது. அவர்களுக்கு எந்தத்தடையும் இல்லை. ஆனால் இலட்சக்கணக்கான உறவுகளை இழந்து தமிழ் மக்களுக்காக வேண்டி அவர்களின் நினைவு கூறமுடியாத அளவிற்கு இன்று இந்தத்தமிழ் இனம் இலங்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இதனை அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhu2.html
Geen opmerkingen:
Een reactie posten