தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

கோட்டபாய ராஜபக்ஷ சீனாவுக்கு பறந்தார்: இராணுவ பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் !

சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிடையிலான முதலாவது பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல், சீனத்தலைநகரான பீஜிங்கில் நடைபெற்றது என அதிர்வு இணையம் அறிகிறது. சீன மக்கள் விடுதலை படையின் உதவி பிரதானி ஜெனரல் வாங் குவான் ஷோன், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பிரதம அதிதிகளாக கலந்துக் கொண்டனர்.
வலயப்பாதுகாப்பு நிலைமைகள், இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அண்மையில் சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்த போது இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கப்பாட்டிற்கு வந்த, இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளித்தல் மற்றும் கடல் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் சீன இராணுவப்பிரிவு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்தே கோட்டபாய ராஜபக்ஷ சீனா சென்று இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். உலகத் தலைவர்கள் பலர் அமெரிக்கா சென்று ஐ.நாவில் உரையாற்றிக்கொண்டு இருக்க, ஓசைபடாமல் கோட்டபாய சீனா சென்றுள்ளார் என்பது, இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1097.html

Geen opmerkingen:

Een reactie posten