தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

சிங்கள பௌத்த நலன் பேணும் வரைபு அரசியலமைப்பு! அத்துரலிய ரத்னதேரர் தயாரிப்பு!

இலங்கை இந்திய தலைவர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 12:07.37 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச,  நரேந்திர மோடிக்கு விளக்கம் அளிக்கவுள்ளார்.
இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதியை சந்திக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பிரதமர் மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்காக இலங்கை ஜனாதிபதி புதுடெல்லி சென்றிருந்த போது முதல் தடவையாக இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம், 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் மற்றும் மீனவர் பிரச்சினைகள் குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViu6.html
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து ஹக்கீம் கவனம்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 12:18.17 AM GMT ]
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் கொள்கைகளில் மாற்றம் செய்யாவிட்டால்ää ஆளும் கட்சிக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகின்றது.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அடைந்த தோல்விää அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை போன்ற காரணிகளின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உரிய பதில் கிடைக்காவிட்டால் மாற்று வழியொன்றைத் தேடிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
அரசாங்கம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாத நிலைமையில் அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
கட்சி தொடர்ந்தும் காத்திருப்பதில் அர்த்தமில்லை.
நாட்டில் பிரச்சினைகள் கிடையாது என எவருக்கும் சொல்ல முடியாது.
பிரச்சினை இல்லாவிட்டால் 30 ஆண்டுகால போர் இடம்பெற்றிருக்காது.
பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரித கதியில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
அரசாங்கத்தின் வேகமான பயணத்தை மக்கள் நிராகரித்துள்ளனர்.
மக்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViu7.html
சிங்கள பௌத்த நலன் பேணும் வரைபு அரசியலமைப்பு! அத்துரலிய ரத்னதேரர் தயாரிப்பு
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 12:30.49 AM GMT ]
சிங்கள பௌத்த மக்களின் நலன் பேணலுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு வரைபு ஒன்றை அத்துரலியே ரத்ன தேரர் தயாரித்துள்ளார்.
இலங்கையில் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு மாற்றாக இந்த வரைபு அரசியலமைப்பைத் தயாரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் சிறுபான்மை இன மக்கள் அதிக சலுகைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள இனவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை போன்ற விடய்ஙகள் காரணமாக அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்தும் எழுப்பப்படுகின்றது.
இந்நிலையில் சிங்கள பௌத்த மக்களின் நலன் பேணல், பௌத்த கலாசாரத்துக்கு முன்னுரிமை அளித்தல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக அவரது வரைபு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபு அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த விகாரையொன்று அமைந்திருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையான பிரதேசத்தில் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.
சிறுபான்மை இன மக்களின் கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசிய விடுமுறை அளிக்கப்பட மாட்டாது போன்ற விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அரசியலமைப்பு தொடர்பில் ஞானசூனியமான பிக்கு ஒருவர் முற்றுமுழுதாக பௌத்த கண்ணோட்டத்தில் வரைபு அரசியலமைப்பொன்றை உருவாக்கியிருப்பது சர்வதேச மட்டத்தில் இலங்கையை சந்தி சிரிக்க வைக்கும் இன்னொரு முயற்சி என்று அரசியல் விற்பன்னர்கள் இதனை விமர்சித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVivy.html

Geen opmerkingen:

Een reactie posten