தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் பிடியாணை: தமிழர்களால் ஏன் முடியவில்லை ?

இந்தியப் பிரதமர் அமெரிக்கா செல்ல 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே, அன் நாட்டு நீதிமன்றம் ஒன்று அவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த 9 வருடங்களாக நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது. அவர் குஜராத் மாநில முதல்வராக இருந்த காலகட்டத்தில், அம்மாநிலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அவ்விடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும், அதனை இடித்தே பாபர் மசூதி கட்டப்பட்டது என்றும் ஒரு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் கொதித்து எழுந்த இந்துக்கள், பாபர் மசூதியை இடித்தார்கள். பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை அடித்து சித்திரவதை செய்தார்கள். பல நூறுபேர் இறந்தும் போனார்கள். இந்த கலவரம் காரணமாகவே நரேந்திர மோடி மீது பாரிய புகார்கள் இன்னும் இருக்கிறது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 முஸ்லீம்கள் கொடுத்த முறைப்பட்டை அடுத்து, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று உடனடியாக அமெரிக்க பெடரல் நீதிமன்றில் வழக்கு ஒன்றை பதிவுசெய்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி நரேந்திர மோடிக்கு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அவர் நீதிமன்றம் வராத பட்சத்தில் அது பிடியாணையாக மாறும். இருப்பினும் நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருக்கும் வரை அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு உள்ளது. அவரை எவராலும் அமெரிக்காவில் வைத்து கைதுசெய்ய முடியாது. இருப்பினும் அவர் அப்பதவியை இழந்தபின்னர் அமெரிக்கா சென்றால், அவர் நீதிமன்றம் செல்லவேண்டி நேரிடும். ஆனால் இதுபோன்ற வலிமையான வழக்கு ஒன்றை, தமிழர்கள் இதுவரை அமெரிக்காவில் தொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பல ஈழத் தமிழர்கள் அங்கே இருக்கிறார்கள்.
சில வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், அவை நாளடைவில் கைவிடப்பட்ட நிலையில் தான் உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1096.html

Geen opmerkingen:

Een reactie posten