தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

தமிழ் மக்களின் போராட்டம் என்பது உணர்வுபூர்வமானது!

ஜனாதிபதி மற்றும் சபாநாயகரின் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும்: மேர்வின் சில்வா
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 02:12.43 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சபாநாயகர் சமால் ராஜபக்ச ஆகியோரின் ஐந்து பிள்ளைகளைப் பாதுகாப்பது ஐவகை ஒழுக்கங்களைப் பேணுவதற்கு நிகரானதாகும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் மூன்று மகன்கள், சபாநயாகரின் இரண்டு மகன்கள் ஆகியோரை மக்கள் பாதுகாக்க வேண்டும்.
சசிந்திர ராஜபக்ச யாருடனும் பேசுவதில்லை, சிரிப்பதில்லை, யாரையும் தொடுவதில்லை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நான் அவரை அழைத்து வருகின்றேன்.
பேசுவார், சிரிப்பார் தேவையென்றால் அழகான ஆண் மகனாக சசிந்திர உங்கள் வீடுகளில் உறங்குவார்.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகுவதனை எவராலும் தடுக்க முடியாது.
நானும் ஒரு சில காலம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டிருந்தேன். எனது பலத்தை காண்பிக்க இவ்வாறு இணைந்து கொண்டிருந்தேன்.
எனக்குத் தெரியும் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றியீட்ட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியினர் தலைமைத்துவ பதவிக்காக போட்டியிடுகின்றனர்.
ஜே.வி.பி. ஓர் கலாச்சாரமற்ற, வரலாறு அற்ற ஓர் கட்சியாகும் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் மொனரல் பிரசேத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUiw4.html
தமிழ் மக்களின் போராட்டம் என்பது உணர்வுபூர்வமானது
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 02:24.12 AM GMT ]
தமிழ் மக்களின் போராட்டமானது உணர்வுபூர்வமானது, ஆத்மார்த்தமானது இந்த உணர்வுபூர்வமான, ஆத்மார்த்தமான போராட்டங்களை முஸ்லிம்களால் நடாத்த முடியுமா என்ற கேள்வியும் சந்தேகமும் பலமாகவுள்ளது.
காரணம் தமிழ் மக்களின் பேரழிவுக்கும், முஸ்லிம்கள் தற்போது பொதுபல சேனாவினால் எதிர்நோக்கியுள்ள, எதிர் நோக்கவுள்ள பிரச்சினைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
தமிழ் மக்கள் பட்ட துன்பம், துயரங்கள், அழிவுகள் போன்று முஸ்லிம்களுக்கு இன்னும் ஏற்படவில்லை. இந்த 30 ஆண்டுகள் கொண்ட இலங்கை இராணுவத்தின் நெருக்குதல் என்பது ஒவ்வொரு தமிழ் மகனையும் பாதித்துள்ளது.
அந்தளவு முஸ்லிம்கள் இன்னும் பாதிக்கப்படவில்லை. இப்போதுதான் முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் போன்ற அழிவுக்கு இன்னும் முஸ்லிம்கள் வரவில்லை.
வீடு உடைப்பு, வீடு அழிப்பு எப்போதும் வேட்டுச் சத்தங்கள் ஆட்கடத்தல், சந்தேகக் கைதுகள், சித்திரவதைகள், கற்பழிப்புக்கள், இப்படி ஏராளமாக துன்பம் என்னும் வட்டத்திற்குள் தமிழ் மக்கள் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.
முஸ்லிம்களோ குறிப்பாக வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களில் பெரும்பாலானோர்கள் இராணுவம், பொலிஸ் படையில் உள்ளார்கள். பொதுவாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்களை கணக்கில் எடுக்காதவர்கள். ஆனால் கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் எல்லோரையும் அனுசரித்து வாழ்ந்து வருகின்றார்கள்.
தென்பகுதி முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா?
வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களில் பெரும்பாலானோர்கள் முஸ்லிம்களுக்கென்று ஒரு அரசியல் கட்சியே தேவையில்லை என்று வாழ்ந்து வருகின்றார்கள். எப்போதும் சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
சிங்களவர்கள் அடித்தாலும், உதைத்தாலும் நான் உங்கள் வீட்டுப்பிள்ளையென்று வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இப்படிப்பட்ட நிலையில் சிங்கள தீவிரவாத அமைப்பு ஒன்று சொல்கின்ற பொதுபல சேனாவை எதிர்த்து வெளிநாடு வாழ் வடகிழக்கு தவிர்ந்த முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்களா? ஒதுங்குவார்களா? என்பது பெரும் கேள்விக் குறியே.
பொதுபல சேனா அமைப்பு என்பது பாதுகாப்பு செயலாளரின் முழு அனுசரணையுடன் அரசாங்கத்தின் அரவணைப்பில் உருவான அரச கண்காணிப்பின் கீழ்வளர்ந்து வருகின்ற ஒரு இனவாத அமைப்பு.
பொதுபல சேனாவின் காலி மாவட்ட காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்ததன் மூலம் பொதுபல சேனா தனது படை என்பதை கோத்தபாய திறந்து காட்டியுள்ளார்.
பொதுபல சேனாவுக்குப் பின்னால் தான் இருப்பதாக ஒளிவு மறைவின்றி காட்டியுள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் பாணியே எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவதுதான்.
பொதுபல சேனாவுக்கு பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய என்பதை ஐ.தே.க.மங்கள சமரவீர எம்பி போட்டுடைத்தார்.
பாதுகாப்புச் செயலாளரும் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை ஆனால் காலியில் பொதுபல சேனா காரியாலயத்தை பாதுகாப்புச் செயலாளர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து பொதுபல சேனா தன்னுடைய படைதான் என்பதை வெளி உலகிற்கு காட்டியுள்ளார்.
பொதுபல சேனா என்பது ஒரு சாதாரண படை அல்ல. பொதுபல சேனா படைக்குப் பின்னால் நாட்டின் முழுப் படையும் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஹலால் முடிந்து விட்டது.
அடுத்தது ஹபாயா என்று கண்டியில் கடந்த வருடம் நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் வாயிலாக சுமார் 20 ஆயிரம் மக்கள் கூடியுள்ளார்கள். பொதுபல சேனா செயலாளர் கூட்டத்தில் உரையாற்றும் போது ஹலால் விடயத்தில் வெற்றி காண்பதற்கு உதவிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும், ஹெல உறுமய கட்சிக்கும்(அமைச்சர் சம்மிக்க ரணவக்க அணி) தேசிய சுதந்திர முண்ணி (அமைச்சர் விமல் வீரவன்ச அணி) இவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக உரையாற்றியுள்ளார்.
இன அழிப்பு முயற்சி
பொதுபல சேனா தற்போது நாடு முழுவதும் ஒருஇன அழிப்புக்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது. பலாங்கொடைப் பகுதி முஸ்லிம்களை பலாங்கொடையை விட்டு வெளியேறுமாறு பகிரங்கமாக உத்தரவிட்டுள்ளது.
மாவனல்ல, குருணாகல உட்பட நாட்டின் பல பாகங்கிளிலும் இப்படியான முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு கிளம்பித்தான் உள்ளது. .வடகிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லையென்றுதான் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை ஆட்சியை அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது.
விட்டுக் கொடுத்தது என்று ஹக்கீம் அப்போது தெரிவித்திருந்தார். இப்போது எந்த மக்களுக்காக கிழக்கு மாகாண சபையை முஸ்லிம் காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததோ அந்த மக்களுக்குத்தான் இன்று தலைக்ககு மேல் ஆபத்து வந்துள்ளது.
கண்டியில் கடந்த வருடம் முஸ்லிம் பெயர் கொண்ட அறிஞர் சித்தி லெவ்வை மாவத்தை, முஸ்லிம் பள்ளி வீதி ஆகிய இரு பெயர் கொண்ட பெயர் பலகைகள் கறுப்பு பெயிண்ட் பூசி அழிக்கப்பட்டுள்ளது. அதே இரவு கிண்ணியா கடல் பாலத்தின் முன்பாக கிண்ணியா அன்புடன் வரவேற்கின்றது என்ற பெயரில் இருந்த இரண்டு பலகை கறுத்த பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.
இது கிண்ணியா துறையடியின் இருமருங்கிலும் இலங்கைப் படையினர் 24 மணிநேரமும் காவலில் உள்ள இடமாகும். இந்த இடத்தில் எந்தவொரு பொதுமகனும் கறுத்த பெயிண்ட் அடிக்க முடியாது. அப்படியானால் யார் இதைச் செய்திருக்க முடியும்.
பாருங்கள் கண்டியில் பொதுப்பல சேனா ஏற்படுத்துகின்ற துவேஷ விதைப்பு கிண்ணியாவில் தமிழ் பலகையில் காட்டப்படுகின்றது. அப்படியானால் எங்கோ ஒரு இடத்தில் முஸ்லிம்கள் மீது உரசப்படும் போது நாடு முழுவதும் பரவக்கூடிய தீயாக உருவெடுத்துள்ளது. அதற்கு உடந்தையாகவும் அல்லது களத்திலும் அரச படையினரே செயலில் இறங்கக் கூடிய அபாய நிலைதான் உள்ளது.
ஒரு இனச் சுத்திகரிப்பை நோக்கி ஒரு பெரும்பான்மை இனம் ஈடுபடப் போகின்றது என்றால் முதலில் இனச் சுத்திகரிப்பு செய்யப்படப் போகின்ற இனத்தைப் பற்றி மிகவும் பிழையாகவும், மிகவும் கீழ் மட்டமாகவும் பெரும் பரப்புரையொன்று செய்யப்படும்.
அதாவது அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கு முன்னர் முழுத் தமிழ் மக்களும் புலிகள், பயங்கரவாதிகள் என்றுதான் நாடு முழுவதும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பிரம்மை ஏற்படுத்தப்பட்டது. இதை நாம் நன்கு கவனிக்க வேண்டும்.
ஆனால் அதை விட மிகவும் நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரிவிட்டர், பேஸ்புக், ஈமெயில் இணையத்தளங்கள் போன்ற வளங்களைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் அவசரமாக பாரிய முன்னெடுப்புக்களில் பொதுப்பல சேனா இறங்கியுள்ளது. புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டோம் தமிழ் தேசியத்தை மடிய வைத்துவிட்டோம் என்ற வெற்றியின் மமதையில்தான் இந்த ஆட்டம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
எங்கெல்லாம் எட்டப்பர் கூட்டங்கள் உள்ளதோ அங்கெல்லாம் எதேச்சதிகாரர்களின் செயல்கள் அதிகரிக்கும் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களுக்குள் குனூத் ஓதுவது ஹலால் சம்மந்தமான பூரண தகவல்கள் முஸ்லிம்களின் ஏனைய தகவல்கள் யாரோ, முஸ்லிம் நபர் ஒருவரால் அல்லது ஒரு முஸ்லிம் அணியால் கொடுக்கப்படுகின்றது. என்பது மட்டும் உறுதி சுய நலனுக்காக இந்த எட்டப்பர் வேலைகளில் சிலர் ஈடுபடலாம்.
ஒற்றுமைப் படாத முஸ்லிம் சமூகம்
ஒற்றுமைப்படாத சமூகங்கள் உள்ள வரையும் அந்த சமூகத்திற்கு விடுதலை விமோசனம் கிடைக்காது என்பது வரலாறு கண்ட உண்மை. அண்மையில் முஸ்லிம் அமைப்பு ஒன்று முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒரு கடையடைப்பை நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், யாழ்.பகுதி முஸ்லிம்களினால் சிறப்பான முறையில் கடையடைப்பு நடைபெற்றது. கடையடைப்பை செய்ய வேண்டாம் என்று முஸ்லிம் அமைப்புக்கள் கேட்டிருந்த போதிலும் கடையடைப்பு நன்றாக நடைபெற்று முடிந்தது.
ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் எந்தவொரு இடத்திலும் கடையடைப்பு நடைபெறவில்லை கிண்ணியா, மூதூர், புல்மோட்டை நிலாவெளி, குச்சவெளி, முள்ளிப்பொத்தானை பகுதி முஸ்லிம்கள் இந்த கடையடைப்பை கணக்கிலே எடுக்கவில்லை.
தானும் தன்பாடும் என்ற வண்ணம் திருமலை மாவட்டத்தில் வழமை போன்று காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் இயங்கியது. இந்த கடையடைப்புக்கும் எங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல நாட்டின் சகல பகுதிகளும் இயங்கியதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களில் பங்கு கொள்ளாத முஸ்லிம் சமூகம்
1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முஸ்லிம்கள் தமிழ் மக்களின் எந்தவொரு கடையடைப்பையும் ஹர்த்தால்களையும் ஆதரித்ததும் இல்லை. ஏற்றுக் கொண்டதுமில்லை தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைதைக் கண்டித்து ஒரு ஹார்த்தால் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். செய்யுமாறு நாங்கள் எழுதியிருந்தோம்.
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்பது முஸ்லிம்களுக்கும்தான் என்று பல ஆய்வில் முழுமையாக எழுதியிருந்தோம். இன்று தமிழ் மக்களுக்கு நாளை முஸ்லிம்களுக்கு என்பதை கடந்த மாதங்களாகச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம்.
அநியாயத்திற்கும் அக்கிரமங்களுக்கும் அநீதிகளுக்கும் துணைபோன முஸ்லிம் இனம் சில நடக்கக் கூடாதசம்பவங்களுக்கு உட்படலாம் என்பதையும். முஸ்லிம்களிடம் மனித நேயம் மரத்துப் போய் விட்டது பதவி பட்டம் கண்ணை மூடி விட்டது என்பதை உணர்வு பூர்வமாகவும் ஆர்த்மார்த்தமாகவும் எழுதி இருந்தோம்.எழுதி வருகின்றோம்.
தமிழர் நடாத்தும் உரிமைப் போராட்டமும், தமிழர் கோரும் சுயநிர்ணயமும் முஸ்லிம்களுக்கும்தான் என்பதை எங்களது பல ஆய்வுக் கட்டுரைகளில் எழுதிப் பதிவு செய்திருந்தோம்.
இப்போது முஸ்லிம்கள் நடாத்திய ஹார்த்தாலில் திருமலை மாவட்ட முஸ்லிம் மக்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஹர்த்தாலை ஏற்றுக் கொள்ளவும் இல்லை ஹர்த்தாலில் கலந்து கொள்ளவும் இல்லை அதே போன்று இந்த ஹர்த்தாலை வடகிழக்கு வாழ் தமிழ் மக்களும் கலந்து கொள்ளவும் இல்லை இதற்கு ஆதரவும் தெரிவிக்கவும் இல்லை எதிர்ப்பும் இல்லையென்ற நிலையில் ஒதுங்கி இருந்தார்கள் இனிமேலும் ஒதுங்கி இருக்கலாம்.
தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஏற்க வேண்டும்
தமிழ் மக்களின் நியாயமான எந்தவொரு உரிமைப் போராட்டத்தையோ அல்லது ஒரு ஹர்த்தாலையோ ஏற்றுக் கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் இல்லை இன்று வரையும் இல்லை.
தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாத வரைக்கும் முஸ்லிம்கள் தனித்துவிடப்பட்ட ஒரு இனம் என்பதை நாம் எமது பல ஆய்வகளில் எழுதியுள்ளோம். அதுதான் இப்போது நடந்துள்ளது. அண்மையில் முஸ்லிம்கள் நடாத்திய ஹர்த்தாலில் தமிழ் மக்கள் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.
முஸ்லிம்களின் ஹர்த்தால்களில் தமிழ் மக்களும் பங்கெடுக்கும் போதுதான் அந்த ஹர்த்தால் முழுமையடையும். வடகிழக்கில் அரசு நடத்தி வரும் அநியாயங்களையும் அராஜகங்ளையும் முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து எதிர்க்க வேண்டும்.
போராட வேண்டும் அதற்கான நல்லதொரு வாய்ப்பாகவும் களமாகவும் முஸ்லிம்கள் அடுத்த ஆண்டின் ஜெனிவாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்குள் ஒற்றுமையில்லை.இந்த ஒற்றுமை எங்களுக்குள் எப்போது உருவாகுமோ அன்றுதான் நாம் உண்மையாகப் போராடலாம் அந்த ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம் பகுகளில் ஹர்த்தால் நடைபெற்ற போது திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்கள் கலந்து கொள்ளவில்லை.
ஆனாலும் சரியான முறையில் அந்த ஹர்த்தால் ஒழுங்கமைக்கப்படவில்லையென்றும் சொல்லப்படுகின்றது. முஸ்லிம்கள் ஹார்த்தால் செய்வதென்றால் அது வடகிழக்கில் மட்டும்தான் முடியும் ஏனைய பகுதிகளில் முடியாது.
இனிவரும் காலங்களில் முஸ்லிம்களும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட அளவுக்கு முஸ்லிம்களும் பாதிப்புக்களுக்குள் உள்ளாக்கப்படும் போது மட்டுமே முஸ்லிம்களுக்குள் ஒரு ஒற்றுமையேற்படலாம். அதாவது ஒன்றுபட்ட தமிழ் மக்கள் போன்று அந்த நாள் வரும் காலம் வெகுதூரமில்லை எனலாம்.
-எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUiw5.html

Geen opmerkingen:

Een reactie posten