[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 01:11.50 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அது செய்வோம் இதுசெய்வோம் என பொய் வாக்குறுதிகளை முன்வைத்து வாக்குக் கேட்கவில்லை. கடந்த காலங்களில் செய்தவற்றை கூறியே வாக்குக் கேட்கின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைய ஊவா மாகாணத்திலுள்ள பெருந்தோட்டத்துறை மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளும், உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வீதிகள் கார்பட் இடப்பட்டிருப்பதுடன், நீர், மின்சார இணைப்புக்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நடைஇபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஏற்கனவே இருந்த தமிழ் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல் செய்து ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களுக்குப் பாரிய துரோகமிழைக்கவுள்ளது.
முதலமைச்சர் கனவுடன் ஹரீன் பெர்னான்டோ தேர்தலில் போட்டியிடுகிறார். அவருடைய கனவு பலிக்காது. இவருக்குப் பதிலாக வேலாயுதம் பாராளுமன்றம் சென்றுள்ளார். இதனால் இவர் வகித்துவந்த மாகாண சபை உறுப்புரிமை இல்லாமல் போனது.
எதிர்வரும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்கு வங்கியை அதிகரிக்கவே ஹரீன் பெர்னான்டோ இத்தேர்தலில் போட்யிடுகிறார். பாராளுமன்றத் தேர்தல் வந்தவுடன் ஹரீன் பெர்னான்டோ அதில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றுவிடுவார்.
ஆனால் வேலாயுதத்துக்கு பாராளுமன்றம் செல்லவும் முடியாது மாகாண சபைக்குச் செல்லவும் முடியாது. தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்யும் ஐ.தே.கவின் இந்த முயற்சியானது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUiw2.html
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 01:52.58 AM GMT ]
கூட்டமைப்பு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயம் நிலவி வருவதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களுக்கு கட்சி பற்றிய விளக்கம் அளிக்கப்படாமையே இதற்கான காரணமாகும்.
பிழையான அபிப்பிராயத்தை நீக்கும் நோக்கில் சிங்கள மக்களுக்கு கட்சி பற்றி தெளிவுபடுத்தப்பட உள்ளது.
பிளவுபடாத இலங்கைக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
தமிழ் மக்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ வன்முறைகளில் ஈடுபட விரும்பவில்லை.
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அரசாங்கம் பிழையான பிரச்சாரங்களை செய்துள்ளது.
இதனால் தெற்கு மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான புரிந்துணர்வற்ற தன்மை நீடித்து வருகின்றது எனவும் இந்த நிலைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUiw3.html
Geen opmerkingen:
Een reactie posten