[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 03:53.39 AM GMT ]
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
பாக்குநீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை செய்து வரும் மீனவர்களை துன்புறுத்துவதில் இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் புதிய உத்தியை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
மோசமான வானிலை காரணமாக நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகளையும், எந்திரக் கோளாறினால் தத்தளிக்கும் எந்திரப்படகுகளையும், இந்தப்படகில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக வரும் மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை குறிவைத்து செயல்படுகிறது.
இதுபோன்ற படகுகளில் தவித்துக்கொண்டிருக்கும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்படுகின்றனர். இதுமுற்றிலும் மனிதத்தன்மையற்ற அணுகுமுறையாகும். மேலும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தர்மத்துக்கு முற்றிலும் எதிரான செயலாகும்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 8ம் திகதி 6 மீனவர்களுடன் எந்திரப்படகு மீன்பிடிப்புக்காக சென்றது. எந்திரக் கோளாறினால் படகு நின்றுவிட்ட நிலையில், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர்கள் அனைவரும் 9ம் திகதியன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அந்த படகோடு அவர்கள் அனைவரும் இலங்கை தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று தெரிய வருகிறது. அதற்கு முன்பதாக ஒன்று மற்றும் 2ம் திகதிகளில் இரண்டு சம்பவங்களில் படகு கோளாறினால் நடுக்கடலில் இதுபோல் தத்தளித்த 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு படகுகளும் மூழ்கிவிட்ட நிலையில், அவர்களைக் காப்பாற்றப்போன மீனவர்கள் சென்ற படகும் இலங்கை கடற்படையினரால் பிடிபட்டது. அந்த 15 மீனவர்களும், படகும் இலங்கை அரசின் காவலில் இன்னும் உள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் அப்பாவி ஏழை மீனவ குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. மேலும் இதனால் மீனவ மக்களின் மத்தியில் அமைதியின்மையும், மனக் கொந்தழிப்பும் ஏற்படுகிறது.
இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 63 மீன்பிடி படகுகளும் அன்றாட பராமரிப்புக்கு உட்படுத்தப்படாததால் சீர்குலைவுக்கு உள்ளாகின்றன. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளது. உடனே அவை திருப்பித் தரப்படாவிட்டால், மீட்கப்பட முடியாத அளவுக்கு கெட்டுவிடும்.
இதுபோன்ற நிகழ்வுகள், கச்சத்தீவை மீட்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்க வகை செய்துள்ள, இந்திய இலங்கை இடையேயான 1974, 1976-ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.
வரலாற்றுப் பூர்வமாகவும், கலாசார ரீதியாகவும், பூகோளப்படியும் கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்தது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. இதுபோன்ற மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைப்பதற்கு கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.
எனவே 9ம் திகதி நடந்த சம்பவத்தில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள 6 மீனவர்கள் மற்றும் ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டுள்ள 15 மீனவர்கள் ஆகியோரையும், 64 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று உடனடியாக நீங்கள் இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு உங்கள் தலைமையிலான மத்திய அரசு நிரந்தர தீர்வு அளிக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhxy.html
வடக்கில் தீவிரப்படுத்தப்படும் இராணுவத்தின் சிங்கள குடியேற்றங்கள்!
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 04:37.35 AM GMT ]
இதன்காரணமாக வடக்கில் பாரிய கலாசார மாற்றங்கள் ஏற்படும் என்று தமிழ்த்தரப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இராணுவ தளபதி தயா ரட்நாயக்க கடந்த வியாழக்கிழமையன்று வடக்கின் பல பகுதிகளுக்கும் சென்று, சிங்கள குடியேற்றங்களை பார்வையிட்டதாக, பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சிங்கள குடியேற்றங்கள் யாவும் தமிழ் நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் வவுனியாவின் கொக்காச்சகுளம் என்ற தமிழ் கிராமம், நந்திமித்திரிகம என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை தவிர விடத்தல்தீவு மற்றும் பதவியா போன்ற இடங்களிலும் சிங்கள குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhx1.html
Geen opmerkingen:
Een reactie posten