தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 september 2014

ஐ.நாவின் புதிய ஆணையாளரை அரசாங்கம் சந்திப்பதால் விசாரணையில் மாற்றம் வராது: த.தே.கூ!

குடும்ப அரசியலினால் நாட்டுக்கு நன்மை ஏற்படாது: விமல் வீரவன்ச
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 02:44.18 AM GMT ]
குடும்ப அரசியலினால் நாட்டுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முதலில் தந்தை பின்னர் தாய் அதன் பின்னர் மகன் என்ற குடும்ப அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிக்க வேண்டும்.
படையினர் உயிர்த்தியாகம் செய்து நாட்டை மீட்டெடுத்தது, பிரதேச அரசியல்வாதிகளின் குடும்பங்களை போசிப்பதற்கு அல்ல.
பிரதேச அரசியல்வாதிகளின் நலன்களை கருத்திற் கொண்டு புலிகள் தோற்கடிக்கப்படவில்லை.
அரசாங்கத்துடன் எங்களுக்கு முரண்பாடு உண்டு. கிடைப்பதனை சாப்பிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டமல்ல நாம்.
புலிகளை போரின் மூலம் தோற்கடிக்க முடியாது என குறிப்பிட்ட காலத்தில், புலிகளை தோற்கடித்து நாட்டை ஒன்றிணைக்க முடியும் எனத் தெரிவித்தோம்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் புதிய தீர்மானம் ஒன்றை மக்கள் எடுக்க வேண்டும்.
பழைய கட்சிகளுக்கு தெரிந்த முகங்களுக்கு வாக்களிப்பதனை தவிர்த்து, புதியவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
ஊவா பரணகம பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhw3.html

மாவீரர்கள் சிந்திய இரத்தங்கள் வீண்போகக் கூடாது: வைகோ - ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் 7வது நாள்
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 02:45.24 AM GMT ]
துன்ப, அவல நிலையில் தவிக்கும் ஈழத்தமிழர்களின் அவல குரலுக்கு நீதி கேட்கும் முகமாக இந்த ஈருருளிப்பயணம் அமைகின்றது.
மாவீரர்கள் சிந்திய இரத்தங்கள் வீண்போகக் கூடாது. அது வீண் போகாது,கொட்டிய குருதி வீண்போகாது, அவர்கள் தந்த ஆவி வீண்போகாது, அது எம்மை இயக்கட்டும்.
அந்த உணர்வோடு வாருங்கள், ஜெனிவாவுக்கு வாருங்கள், ஐநா முன்னால் வாருங்கள், முருகதாசன் திடலுக்கு வாருங்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழீழமே தீர்வு-  ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் 7வது நாள்
தமிழின அழிப்புக்கு நீதி கோரி, தமிழ் மக்களின் அவலக் குரலை எண்திசைக்கும் பரப்பும் பொருட்டு ஐநா வை நோக்கிய ஈருருளிப்பயணம் ஏழாவது நாளாக இன்று பிரான்ஸ் நாட்டின் ஊடாக நாளை மாலை சுவிஸ் நாட்டுக்குள் செல்ல இருக்கின்றது.
ஈருருளிப் பயணம் செல்லும் வழிகளில் நகரங்களின் நகரபிதாவுடனும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டது.
இச் சந்திப்பில் ஈருருளிப் பயணத்தின் கோரிக்கைகளை முன்வைத்து ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை அனைத்துலக குமூகம் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஐந்து அம்ச கோரிக்கைகளும் பின்வருமாறு அமைகின்றது:
1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ் மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்பட வேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்க வேண்டும். 
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்துஇ நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 
மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெல்ஜியம், பிருஷ்செல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக இருந்து ஐரோப்பிய நாடுகளை கடந்து ஐநா சபையை நோக்கி நீதிக்கான ஈருருளிப் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது.
நாளை மாலை 7 மணிக்கு Suwiss Basel St-Louis ( Elsasserstr 250, 4056 Basel) எனும் எல்லைப் பகுதிக்கு ஈருருளிப் பயணம் செல்ல இருக்கின்றது. ஈருருளிப் பயணத்தை மேற்கொள்ளும் மூன்று உறவுகளையும் வரவேற்க சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhw4.html
வடமராட்சி வீதியில் எரிந்து கிடந்த பெண்: வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 02:58.34 AM GMT ]
யாழ். வடமராட்சி தம்பசிவம் சந்தியில் நேற்று பெண்ணொருவர் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் சீதாதேவி (வயது 38) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், அவரது வீட்டில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் எரிந்த நிலையில் நடுவீதியில் கிடந்துள்ளார்.
இதனை அவதானித்த பொதுமக்கள் அம்புலன்ஸ் மூலம் குறித்த பெண்ணை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhw5.html
ஐ.நாவின் புதிய ஆணையாளரை அரசாங்கம் சந்திப்பதால் விசாரணையில் மாற்றம் வராது: த.தே.கூ
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 03:19.23 AM GMT ]
இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய ஆணையாளரை இலங்கையின் அரச தரப்பினர் தனிப்பட்ட முறையில் சந்திப்பதால் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
எனவே, இலங்கை அரசாங்கம் நியாயமான தீர்வு ஒன்றை எட்டக்கூடிய சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய ஆணையாளரின் கன்னி உரையின் மூலமாக தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை சரியான எல்லையை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீது இலங்கை அரசாங்கம் கூறி வந்த குற்றச்சாட்டுக்களுக்கு புதிய ஆணையாளரின் கன்னி உரை தக்க பதிலடியாக அமைந்துள்ளது என்றும் சுரேஷ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUhw6.html

Geen opmerkingen:

Een reactie posten