[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 03:42.09 AM GMT ]
மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையிலிருந்து வடகிழக்காக 70 மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பத்து மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் அத்துமீறி பிரவேசித்து மீனவர்கள் பிடித்த 4200 கிலோ எடை உள்ள டூனா மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் சந்தேகப்படும்படி யாராவது நடமாடுகிறார்களா என கடற்படையினர் தீவிரமாக ரோந்து சுற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
அதே போல் கடலில் தத்தளிக்கும் மீனவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
வென்னப்புவ பிரதேசத்தில் இளைஞர் கொலை
சிலாபம், வென்னப்புவ கிரிகம்பல பிரதேசத்தின் பெலவத்த சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. வென்னப்புவ பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐக்கிய இராச்சியத்தில் இரு இலங்கையர் பலி
இலங்கையர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் வடக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
23 வயதான இலங்கையர் ஒருவர் ஹோட்டல் நீர்த் தடாகத்தில் நண்பர்களுடன் கடந்த வௌ்ளிக்கிழமை நள்ளிரவில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அவரது நண்பர்கள் தங்கள் அறைகளுக்கு சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து அவரது உடல் மறுநாள் காலை நீச்சல் தடாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு 20 வயதான இலங்கையர் கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த போது, நீரில் மூழ்கியுள்ளார்.
பின்னர் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw7.html
ஐ.நாவின் காணாமல் போதல் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க இலங்கை மறுப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 03:45.28 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் பேரவை அமர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிக்கும் நிலையில், அதில் தமது விஜயம் குறித்த கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் சுயமின்றி காணாமல் போதல் சம்பந்தமான குழு சமர்ப்பித்துள்ளது.
எனினும் இதனை ஏற்க மறுத்துள்ள இலங்கை அரசாங்கத் தரப்பு, தமது ஆணைக் குழுவின் பணிகளை முடிவடைந்த பின்னரே குறித்த குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த ஐக்கிய நாடுகள் குழுவுடன் தொடர்ந்தும் தாம் இணைந்து செயற்பட தயார் என்று இலங்கையின் பிரதிநிதி மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவினரை சந்திக்கவுள்ளது ஜனாதிபதி ஆணைக்குழு
காணாமல் போதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முதல்தடவையாக அந்த குழுவுக்கான ஆலோசனைக்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரை சந்திக்கவுள்ளது.
இந்த வார இறுதியில் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகமவின் தகவல்படி, சர்வதேச நிபுணரான சேர் டெஸ்மன்ட் டி சில்வாவின் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவையே தமது குழு சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நிபுணர் குழுவினரை கிளிநொச்சியில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கிளிநொச்சியில் நடைபெறவுள்ள காணாமல் போனோர் தொடர்பான விசாரணை அமர்வில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பரணகம தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த அமர்வில் அவர்கள் பங்கேற்பார்களா? என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பரணகம குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfxy.html
Geen opmerkingen:
Een reactie posten