தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 september 2014

வடமாகாணசபை அரசியலமைப்பிற்கும், சட்டத்திற்கும் மாறாகச் செயற்படவில்லை!- அவைத்தலைவர்

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தப் போவதாக மங்கள சமரவீர சூளுரை
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 06:20.38 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்வரும் 20 ஆம் திகதி ஊவா மாகாண தேர்தலில் வெற்றி பெற்ற பின், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பலமான சக்தியை கட்டியெழுப்பி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தப் போவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அப்புத்தளை போவே தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம், இன, மத, குல ரீதியாக நாட்டை பிளவுபடுத்தியுள்ளது. அனைவரையும் ஒரே இலங்கையர் என்று ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே ஐக்கியப்படுத்த முடியும்.
இதனால், ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த எதிர்க்கட்சிகளின் பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ருவான் விஜேவர்தன, ஹர்ச டி சில்வா, வேலாயுதம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐ.தே.கட்சியில் 20 பேர் கொண்ட நிர்வாக மேற்பார்வை குழு
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய 20 பேர் கொண்ட குழுவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமான யோசனை எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்பட உள்ளது.
தலைமைத்துவச் சபையை கலைக்குமாறு சஜித் பிரேமதாச முன்வைத்த யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உரிய பதிலை வழங்காத நிலையில், தலைமைத்துவச் சபையின் பலத்தை குறைக்க சஜித், இவ்வாறு 20 பேர் கொண்ட குழு தொடர்பான யோசனையை முன்வைத்திருப்பதாக அந்த கட்சியின் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfxz.html
வடமாகாணசபை அரசியலமைப்பிற்கும், சட்டத்திற்கும் மாறாகச் செயற்படவில்லை!- அவைத்தலைவர்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 06:44.17 AM GMT ]
வடமாகாணசபை நிர்வாகரீதியாக அரசியலமைப்பிற்கும், கட்டளைச் சட்டத்திற்கும் மாறாகச் செயற்படவில்லை. என தெரிவித்திருக்கும் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அரசியலமைப்பிற்கும், மாகாணசபைகள் கட்டளை சட்டத்திற்கும் மாறானவையா? என்பது பார்ப்பவருடைய பார்வையை பொறுத்தே அமையும் எனவும் கூறியுள்ளார்.
மாகாணசபை சட்டத்திற்கு மாறாக செயற்படுவதாகவும், சட்டத்திற்குட்பட்டு செயற்பட்டால் தாம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் யாழ்.மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துக் கேட்ட போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் துறைசார் அமைச்சுக்கள் நிர்வாகரீதியாக அரசியலமைப்பிற்கும், மாகாணசபைகள் கட்டளைச் சட்டத்திற்கும் மாறாக செயற் படுகின்றதா? என்றால் நிச்சமாக இல்லை. நிர்வாகரீதியாக நாம் சகல சட்டவிதிகளுக்கும் உட்பட்ட வகையில் செயற்படுகின்றோம். அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.
குறிப்பாக பளை மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களையும், காற்றாடிகளையும் எ ங்கள் மாகாண எல்லைக்குள் அமைப்பதற்கு அந்த நிலையத்தை அமைக்கும் நிறுவனத்துடன் நாங்கள், எங்களுடைய அமைச்சு மேற்கொண்ட ஒப்பந்தம் சட்டத்திற்குட்பட்ட வகையில் அமைந்திருக்கின்றது. எனவும் இவ்வாறான மக்கள் நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் தான் அதற்கு ஒத்துழைப்பேன்,
என்னும் அதே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கின்றார். இது நாங்கள் நிர்வாகரீதியாக அரசியலமைப்பிற்கும் சரி மாகாணசபைகள் கட்டளைச் சட்டத்திற்கும் சரி மாறாக நாங்கள் நடக்கவில்லை. என்பதற்கு மிகச்சிறந்த உ தாரணமாக அமைந்திருக்கின்றது.
இதற்கு மேல் மாகாணசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தொடர்பாக பார்த்தால் அது பார்ப்பவர்களுடைய பார்வையை பொறுத்தது என்றே கூறவேண்டும்.
இது மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு சபையாகும். இங்கே வெவ்வேறு பிரச்சினைகளுடன் வாழும் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து உறுப்பினர்கள் வருகின்றார்கள். அவர்கள் தங்களுடைய மக்களுடைய நிலைப்பாட்டை, அவர்களுடைய பிரச்சினைகளை சபையில் பேசுவார்கள். நாங்கள் அரசியல்வாதிகள் அதற்காகவே இந்த சபைக்கு வந்தோம்.
எனவே மாகாணசபை சட்டத்திற்கு மாறாகச் செயற்படுகின்றது. என்றால் நிர்வாகரீதியாக அவ்வாறான ஒன்று நடைபெற்றிருக்கவில்லை. இதற்கு 100வீதம் உத்தரவாதம் வழங்க முடியும்.
அதேபோல் சபையில் பேசப்படும் விட யங்கள், எடுக்கப்படும் தீர்மானங்கள் சட்டத்திற்குட்பட்டதா? அப்பாற்பட்டதா? என்பது பார்ப்பவரை பொறுத்தது. பிரச்சினைகளோடு வாழும் மக்கள் நிலையிலிருந்து பார்க்கும் எமக்கு அது சரி. என்றார். 
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfx1.html

Geen opmerkingen:

Een reactie posten