தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

அரசு பலவந்தம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்குரிமையை கொள்ளையிடுகிறது: ஹேமகுமார நாணயக்கார

பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர்: பொலிஸ் திணைக்களம்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 05:27.47 AM GMT ]
பெண்களை விட ஆண்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக பொலிஸ் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 359 பெண்களும் ஆயிரத்து 267 ஆண்களும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட ஆண்களில் 71 வயதிற்கு மேற்பட்ட 142 பேர் எனவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை தற்கொலை செய்துகொண்டுள்ள பெண்களில் அதிகளவானோர் 17 வயதிக்கும் 20 வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
தற்கொலை செய்தவர்களின் பெரும்பாலானவர்கள் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 703 ஆண்களும் 752 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 721 ஆண்களும் 805 பெண்களும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் எனவும் அந்த ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfsz.html

கிளிநொச்சியில் மாதர் சங்கங்கள் வினைத் திறனுள்ளவையாக இயங்குகின்றன!- டெனீஸ்வரன்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 05:34.22 AM GMT ]
வடமாகாண சபையின் அபிவிருத்திய நோக்கிய வேலைத்திட்டங்களின் அடிப்படையில் கிளிநொச்சியில் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடமாகாண சபை முதல்வரின் வழிகாட்டலில் கிராம அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து வர்த்தகவாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரனின் பணிப்பிற்கு அமைய அமைச்சினால் வடமாகாணசபையின் கீழான 5 மாவட்டங்களிலும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக கண்டாவளை நாதன்குடியிருப்பில் சிறிய அளவிலான அரைக்கும் ஆலையொன்றுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கடந்த 12ம் திகதி யாழ், கிளிநொச்சி மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் வடமாகாண அமைச்சர்கள் உறுப்பினர்களின் ஆதரவுடன் அமைச்சால் நடைபெற்றுள்ளது.
நாதன் குடியிருப்பு மாதர் சங்கத்திடம் கையளிக்கப்படவுள்ள இந்த சிறிய அரைக்கும் ஆலைக்கான வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடாமகாண அமைச்சர்களான டெனீஸ்வரன் த.குருகுலராஜா, உறுப்பினர் ப.அரியரத்தினம், கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் நாவை.குகராஜா, மற்றும் உறுப்பினர்களான தவபாலன், புஸ்பராஜா, கண்டாவளை பிரதேச கட்சியின் அமைப்பாளர் நந்தா, மற்றும் கண்டாவளை பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள்,  மாதர்சங்கங்களின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்து உரையாற்றி அமைச்சர் டெனீஸ்வரன், எனது அமைச்சினால் வகுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த கிராமத்தில் இந்த அரைக்கும் ஆலைக்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எனது அமைச்சின் வேலைத்திட்டங்கள் மாற்றுவலுவுள்ள உறவுகளையும் பெண்களையும் குடும்பதலைவர்களையும் முதன்மைபடுத்தியதாக அமைகின்றது.
நான் எமது அமைச்சின் கீழுள்ள 5 மாவட்டங்களிலும் நான் பார்த்த அளவில் பெண்கள் அமைப்புக்கள் மிகவும் வினைத்திறனுள்ள அமைப்புக்களாக இயங்குவதை நான் அவதானித்துள்ளேன்.
அதன் வெளிப்பாடாகத்தான் இந்த வேலைத்திட்டம் பெண்கள் அமைப்பிடம் பூர்த்திசெய்யப்பட்டு கையளிக்கப்படவுள்ளது.
அத்துடன் நன்னீர் மீன்பிடி மீன் வளர்ப்பு தொடர்பாகவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனவே அது தொடர்பான கிராம அமைப்புக்கள் எமது அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfs0.html
அரசு பலவந்தம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்குரிமையை கொள்ளையிடுகிறது: ஹேமகுமார நாணயக்கார
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 05:48.29 AM GMT ]
மிகவும் அநீதியான சூழ்நிலையிலேயே ஊவா மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதாக பௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முழு அரச அதிகாரத்தையும் பயன்படுத்தி அரசாங்கத்தின் அனுசரணையுடன் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஊவாவில் இருக்கும் அப்பாவி மக்களின் ஜனநாயகத்தை அரசாங்கம் அடுப்பில் போட்டுள்ளது.
ஏகாதிபத்திய வெள்ளையர்கள் அன்று ஊவா மக்களுக்கு கொடுத்த கஷ்டங்களுக்கு ஈடான கஷ்டங்களை அரசாங்கம் கொடுத்து கொண்டிருக்கின்றது.
மனித உரிமை மீறியே அரசாங்கம் இந்த தேர்தலுக்கு தயாராகியுள்ளது.
மக்களின் பலமான எதிர்ப்பு அரசாங்கத்திற்கு பேரிடியாக மாறியுள்ளதால், பலவந்தம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்குரிமையை கொள்ளையிடவே அரசாங்கம் தயாராகி வருகிறது எனவும் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகளுக்காக சயனைட் சாப்பிடவும் தயார் - பாலித தெவரப்பெரும
துன்புறும் நோயாளிகளுக்காக பச்சை மிளகாய் அல்ல சயனைட்டையும் சாப்பிட தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
துன்புறும் எந்த நோயாளியாக இருந்தாலும் அவர்களுக்காக எந்த சவாலையும் ஏற்றுக்கொள்வேன்.
அவர்களுக்காக பச்சை மிளகாய் அல்ல சயனைட்டை சாப்பிடவும் தயார்.
உண்மையில் பச்சை மிளகாயை சாப்பிட வேண்டியது நாங்கள் அல்ல. சிறுநீரக நோய் பரவ உதவும் அரசாங்கத்தின் அமைச்சர்களே அதனை சாப்பிட வேண்டும் எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfs1.html

Geen opmerkingen:

Een reactie posten