தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் மட்டம் அதிகரிப்பு: டோனி அபோட்!

அவுஸ்திரேலியாவானது தனது தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தை மத்திய மட்டத்திலிருந்து உயர்மட்டத்திற்கு உயர்த்தியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.
ஈராக் மற்றும் சிரியா போராளிகள் பிரச்சினையால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவு குறித்து கவலை அதிகரித்துள்ளதை கவனத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி போராளிக் குழுவுடன் இணைந்து பணியாற்றும் அல்லது அதனால் ஈர்க்கப்படும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
எனினும் திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்று தொடர்பில் குறிப்பிடத்தக்க புலனாய்வுத் தகவல்கள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.
"தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரிக்கப்பட்டமை உடனடி தீவிரவாத தாக்குதல் ஒன்றைக் குறிக்கவில்லை என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். ஏதாவது தாக்குதல் நடத்தப்படுவது சம்பந்தமான புலனாய்வு தகவல்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.
"அவுஸ்திரேலியாவில் தாக்குதலை நடத்துவதற்கான நோக்கத்துடனும் இயலுமையுடனும் இங்கு சிலர் உள்ளனர் என்ற புலனாய்வுத் தகவலை அடிப்படையாக வைத்தே நாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என அவுஸ்திரேலிய பிரதமர் கூறினார்.
பெருந்தொகையான அவுஸ்திரேலியர்கள் மத்திய கிழக்கிலுள்ள 'ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் மற்றும் ஜபாத் அல் - நுஸ்ரா ஆகிய போராளிக் குழுக்களுடன் இணைந்து போராடுவதற்கு சென்றுள்ளதாகவும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பும் இத்தகையவர்களாலும் அவர்களது ஆதரவாளர்களாலும் உள்நாட்டில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் அச்சுறுத்தல் மட்ட முறைமை 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், மத்திய மட்டத்திலிருந்து உயர் மட்டத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உயர்த்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவானது தனது பிரஜைகள் போராளிகளுடன் இணைந்து கொள்வதை தடுப்பதற்கு அவர்கள் சில பிரதேசங்களுக்கு பயணிப்பதற்கு கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
அத்துடன் அந்நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUfs2.html

Geen opmerkingen:

Een reactie posten