அடுத்த பிரதமராக மைத்திரிபால நியமிக்கப்படாவிட்டால் சுதந்திரக் கட்சி பாரிய வீழ்ச்சியைத் தழுவும்: தம்மாநந்த தேரர்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 09:30.01 AM GMT ]
அண்மையில் பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
18 வயதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட மைத்திரிபால, கட்சியின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
சிறந்த ஓர் அரசியல்வாதியாக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றி வருகின்றார்.
நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்தவர்கள் இதுவரையில் பிரதமர் பதவியை வகித்துள்ள போதிலும் பொலனறுவையில் எவரும் பிரதமர் பதவியை வகித்தது கிடையாது.
மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக நியமிக்குமாறு மகா சங்கத்தினரும் பல தடவைகள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்தியா தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றன.
குறித்த நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்ட போது இது குறித்து தெரிவிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
60 லட்ச ரூபா செலவில் விஹாரைக்கு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கட்டிடமொன்றை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்த கட்டட அங்குரார்ப்பண நிகழ்வுகளில் பங்கேற்ற போதே தம்மாநந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUju7.html
சுப்பிரமணியன் சுவாமியை பஜகவினர் கட்டுப்படுத்த வேண்டும்: ஜி.கே வாசன்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 09:48.27 AM GMT ]
அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே ஜி.கே வாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார். அவரைக் கட்சி மேலிடம் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்த சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக் கடலில் அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என தான் இலங்கை அரசிற்கு ஆலோசனை வழங்கியிருந்ததாக கூறியிருந்தார்.
கைது செய்யும் மீனவர்களை விடுவிக்கும் படி தான் கோரியதாகவும் மீனவர்கள் தொழிலாளர்கள் என்றும் படகு உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்றும் தான் இவ்வாறு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjvy.html
Geen opmerkingen:
Een reactie posten