தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

வடக்கு மாகாணம் தனியான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளது: கெஹெலிய ரம்புக்வெல்ல!

மகிந்த பௌத்த சாசனத்தை இராணுவமயப்படுத்த ஆரம்பித்துள்ளார்: ரணில் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 08:41.30 AM GMT ]
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பௌத்த சாசனத்தை இராணுவமயப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் விகாரை, தேவாலய சட்டமூலத்தின் ஊடாக அவர்கள் அதனை நிறைவேற்றி வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டமூலம் தொடர்பில் பௌத்த மதத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு தெளிவுப்படுத்தும் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த சட்டமூலத்தின் ஊடாக ஜெனரல் ஒருவருக்கு பௌத்த சாசனத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.
யுத்த காலத்திலேயே ஜெனரல்கள் இருக்க வேண்டும். புத்தசாசனத்திற்கு ஜெனரல்கள் அவசியமில்லை.  அத்துடன் இந்த சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கம், விகாரைகள், ஆலயங்களின் உரிமைகளில் தலையிட நடவடிக்கை எடுக்கின்றது.
அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து பௌத்த மத தலைவர்களையும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUju4.html
ஜனநாயக மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினராக நிரோஷ் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 08:52.09 AM GMT ]
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்புரிமையில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு மனித உரிமை பணியாளரும், சுதந்திர ஊடகவியலாளருமான தியாகராஜா நிரோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜமமு ஊடக செயலாளர் பாஸ்க்கரா விடுத்துள்ள ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பு மாநகரசபை உறுப்புரிமை வெற்றிடத்துக்கு, தியாகராஜா நிரோஷை நியமிப்பதற்கான யோசனை தலைவர் மனோ கணேசனினால் பிரேரிக்கப்பட்டது.
இந்த யோசனையை நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற முன்னணியின் அரசியல் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற கொழும்பு மாநகரசபை தேர்தலில், தியாகராஜா நிரோஷ் ஜமமு சார்பில் போட்டியிட்டிருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் புதிய மாகாண சபை உறுப்பினர் பதவியேற்பு
கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஜெய்னுதீன் லாஹீர், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அத்மிரல் மொஹான் விஜேவிக்ரம முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி காலமானதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட ஜெய்னுதீன் 10 ஆயிரத்து 710 வாக்குகளை பெற்று பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUju5.html
வடக்கு மாகாணம் தனியான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளது: கெஹெலிய ரம்புக்வெல்ல
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 09:17.44 AM GMT ]
மக்களுக்காக செய்ய வேண்டிய அபிவிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தையும் மறந்து விட்டு வடக்கு மாகாண சபை தனியான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் அதிகாரம் இல்லாத காலத்திலும் அரசாங்கம் அங்குள்ள மக்களுக்காக பெரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தியது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், அந்த மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் முடங்கியுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில், முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு இருக்கும் பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு ஆளுநர் பிரச்சினை என்றால், அதனை மாகாண மக்களின் பிரச்சினைகளுடன் சம்பந்தப்படுத்துவது பாரதூரமான தவறு எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUju6.html

Geen opmerkingen:

Een reactie posten