தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

பிள்ளைகள் அச்சமின்றி கல்வி கற்கும் சூழல் உருவாகியுள்ளது: ஜனாதிபதி

கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது மோடி ஏன் கைகளைக் கட்டியபடியே இருந்தார்?
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 01:33.05 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கைகளைக் கட்டியபடி இருந்த புகைப்படமே வெளியாகியிருந்தன.
இந்தச் சந்திப்பின்போது, கூட்டமைப்பினரிடம் இந்தியப் பிரதமர் கூறியவையும், அவரின் அங்க அசைவுகள் தொடர்பாகவும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியினூடாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அங்க பாசைகள் [body language] அலாதியானவை. இந்தச் சந்திப்பு முழுவதும் மோடி கை கட்டியபடியே இருப்பதில் புலப்படுத்துவது யாதெனில், ஒன்றில் அவர் விடயங்களை கற்றுக் கொள்கின்ற மனநிலையில் இருக்கின்றார். தன்னிடம் கூற வந்த குறைகளை கேட்கும் மனநிலையிலும் அவற்றிற்கான பரிகாரத்தை சொல்லும் மனநிலையிலும் இருந்திருக்கிறார்.
என்னிடம் விட்டு விடுங்கள் நான் ஈழத்தமிழர் விவகாரத்தைப் பார்த்துக் கொள்கிறேன் என்பதை விடுத்து, மோடி ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான கட்டமைப்பு ஒன்றை அமைத்து அவரது ஆட்சியின் பின்பும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒரே கொள்கை நிலவ வழியேற்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் தலைமையாக அங்கீரிக்கப்பட்டிருக்கிறது என்பதனை சிறிலங்காவிற்குச் சொல்வதற்கான செய்தியாக இது அமைந்திருக்கிறது.
கடந்த ஐந்து வருடங்களாக புலம்பெயர்ந்த மற்றும் தமிழகத் தலைவர்களிடையே கூட ஏற்பதற்குத் தயங்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை ஈழத்தமிழர்களிற்கான தலைமைத்துவமாக மோடியின் அரசு ஏற்றுள்ளது என்பதை சாதகமாக பார்க்க வேண்டும்.
இதேவேளை, கிழக்கு மாகாண சபையில் தமிழர்கள் ஆட்சியைப் பிடிப்பதென்பது எட்டாக் கணி. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் சனத்தொகை 40 வீதமாகக் குறைந்துள்ளது. எனவே ஒரு தமிழன், தமிழர் நலன்பேண் கட்சியிலிருந்து முதல்வராக கிழக்கில் ஒருவர் வரக்கூடிய சாத்தியம் இனிமேல் இல்லை.
13வது திருத்தச் சட்டத்திற்கு மேலான தீர்வு என்றால் அது ஒரு சமஸ்டியாட்சியாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் அதற்கான நடைமுறைச் சாத்தியமும் தற்போது இல்லை. தற்கால கள யதார்த்தமும் அதற்கான துணையாக இருக்கப் போவதில்லை.
13வது திருத்தச் சட்டத்தை ஆணித்தரமாக நடைமுறைப்படுத்தி அதன் மூலமாக காணி மற்றும் பொலிஸ் படைகளிற்காக உரிமையை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளிற்கு ஏற்படுத்திக் கொடுக்க இந்தியா வழி செய்ய வேண்டும்.
போன்ற பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlv6.html
பிள்ளைகள் அச்சமின்றி கல்வி கற்கும் சூழல் உருவாகியுள்ளது: ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 02:34.23 PM GMT ]
யுத்தம் நடைபெற்ற காலத்தில் அச்சத்தில் கல்வியைப் பெற முடியாதிருந்த பிள்ளைகள் இன்று சுதந்திரமாக கல்வி கற்று வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளுக்கு மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களை மாத்திரமல்லது உலகத்தை வெற்றி கொள்ள கூடிய பிள்ளைகள் மொனராகலையில் உருவாக வேண்டும்.
தாம் பெற்ற கல்வி கற்கும் சந்தர்ப்பத்தை எதிர்கால சந்ததிக்கும் வழங்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
சகல இன மக்களும் அச்சம் மற்றும் சந்தேகமின்றி வாழக் கூடிய சமூக சூழ்நிலை நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlv7.html

Geen opmerkingen:

Een reactie posten