பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் பாலேந்திரன் ஜெயக்குமாரி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மனித உரிமை செயற்பாட்டாளர்களை நடுங்க வைக்கும் செய்தி என தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான தினம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தினத்தில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள், நண்பர்கள் வவுனியாவில் ஒன்று கூடியதுடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை மற்றும் அதற்கான நீதி கிடைக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் பல மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். உள்ளூர் மற்றும் சர்வதேச எதிர்ப்புகளை அடுத்து பலர் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும் இவர்களில் ஒருவரான பாலேந்திரன் ஜெயக்குமாரி தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போரில் காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முக்கிய பிரச்சாரகராக ஜெயக்குமாரி இருந்து வந்தார்.
ஜெயக்குமாரி தனது நான்கு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகளை போரில் இழந்து பாதிக்கப்பட்டவர். அவர்களில் இரண்டு பேர் போரில் கொல்லப்பட்டனர். அவரது 15 வயதான மூன்றாவது மகன் அரசாங்கத்தின் காவலில் இருந்தபோது காணாமல் போனதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
ஜெயக்குமாரின் 13வயதான மகள் காணாமல்போன தனது சகோதரரின் புகைப்படத்தை ஏந்தியவாறு, தனது அண்ணன் திரும்பி வர வேண்டும் என கோரிக்கை விடுத்தமை தொடர்பான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பேசிய சர்சைக்குரிய சூழ்நிலையில், ஜெயக்குமாரி விசாரணையின்றி தன்னிச்சையாக முறையில் தண்டனை நடவடிக்கைகக்கு இலக்காகியுள்ளமை கேள்விகளை எழுப்பியுள்ளது.
சந்தேக நபர்களுக்கு நீதிமன்ற அணுகலை மேற்கொள்ள இடமளிக்காது நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.
பரவலாக விமர்சிக்கப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் ஊடாக தனிநபர்களை எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க முடியும்.
இந்த சட்டம் போர் நடைபெற்ற போது பயன்படுத்தப்பட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவின் படி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயக்குமாரி நாட்டின் தென் பகுதியில் உள்ள பூசா முகாமில் கடந்த 5 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஆயுதம் ஏந்திய குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் தேடப்பட்டு வந்த நிலையில், ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் கூறியிருந்தார்.
தங்குமிடம் கொடுக்க வயது வந்தவர்கள் எவரும் இல்லாத நிலையில், அவரது மகளும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் மீள உருவாக்கியவர்களுக்கு உடந்தையாக இருந்தார் என்று அரசாங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் மூலம் தமது அன்புக்குரியவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிய முயலும் குடும்பங்களில் சார்பில் பேசும் ஜெயக்குமாரியின் அடிப்படை உரிமை மீறப்பட்டு வருகிறது என்ற நியாயமான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
ஜெயக்குமாரியின் நீண்டகால தடுப்பு காவலானது தமது செயற்பாடுகளுக்கு தன்னிச்சையான நடவடிக்கை மூலம் தண்டனை வழங்கப்படும் என்ற நடுங்க வைக்கும் செய்தியை இலங்கை அரசாங்கம் நாட்டில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.
சட்ட அமுலாக்க அதிகாரிகளால், ஜெயக்குமாரி மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு வருவது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வகையான மனித உரிமை மீறல்கள், இறுதிக்கட்ட போரில் என்ன நடந்தது மற்றும் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பத்தன்மையான மற்றும் சுதந்திரமான ஐ.நா விசாரணை தேவை என்று நிலைப்பாட்டுக்கு பல மக்களின் ஆதரவை பெற்றுக்கொடுக்கும் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlv5.html
Geen opmerkingen:
Een reactie posten