வன்னியில் 2500 இராணுவத்தினர் வெளிநாட்டு இராணுவத்துடன் இணைந்து பயிற்ச்சி !
[ Sep 01, 2014 02:43:29 PM | வாசித்தோர் : 2615 ]
இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டு இராணுவத்தினர் பங்குபற்றும் இணைந்த இராணுவ பயிற்சி நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோதபாஜ ராஜபக்ச முதல்நாள் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
6 நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களுடன் இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த 2500க்கும் அதிகமானோர் இந்த பயிற்சியில் பங்கு பற்றவுள்ளனர். இலங்கை இராணுவத்தால் ஐந்தாவது தடவையாகவும் நடத்தப்படவுள்ள இந்த பயிற்சி நெறி மன்னார், வன்னி, மாத்தளை மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் இந்த பயிற்சி நடைபெறவள்ளது.
மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த பயிற்சிகளின்;போது எற்படும் இடையூறுகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை எந்த நாடுகளின் இராணுவ வீரர்கள் இணைந்த பயிற்சியில் பங்குகொள்வார்கள் என்று இராணுவ ஊடகப் பிரிவு எதுவும் தெரிவிக்கவில்லை.
http://www.athirvu.com/newsdetail/903.htmlமகிந்தர் வந்தால் போர் மூழும் ஆனால் கட்டுப்படுத்தலாம் என தேசிய தலைவர் நினைத்திருந்தார் !
[ Sep 01, 2014 03:11:05 PM | வாசித்தோர் : 7710 ]
மகிந்தர் ஆட்சிக்கு வந்தால், போர் மூழும் ஆனால் மகிந்தரை கட்டுப்படுத்தலாம் என தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தார் என்று ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவின் உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதன் காரணமாகவே புலிகள் மெளனமாக இருந்தார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்போது இருந்த சூழ் நிலையில் மகிந்தருக்கு 55% செல்வாக்கும் ரணிலுக்கு 49% செல்வாக்குமே இருந்தது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் மொத்த வாக்குகளுகும் ஒருவருக்கு கிடைத்தால், அவரே நாட்டின் ஜனாதிபதியாக தேர்வாவார். அப்படியான நிலையில் புலிகள் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ரணில் அரசு அமெரிக்காவுன் கூட்டுச் சேர்ந்து விட்டது என்ற செய்தி அவர்களுக்கு கிடைத்திருந்தது.
மகிந்தர் ஆட்சிக்கு வந்தால் போர் ஆரம்பமாகும் அவர் ஒரு கடும் சிங்களபோக்காளர் என்று புலிகள் நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். இருப்பினும் மகிந்தர் ஆட்சியேற அவர்கள் தடையாக இருக்கவில்லை. இதன் காரணமாகவே புலிகள் அழிந்தார்கள் என்று ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு ஒரு விடையம் புரியவில்லை. போர் என்றாலும் சரி, சமாதானம் என்றாலும் சரி புலிகள், எதற்கும் அஞ்சியது இல்லை. அவர்கள் நினைத்திருந்தால் இணக்க அரசியலை நடத்தியும் இருக்கலாம் ஈபிடிபோ போல. அவர்கள் தமது பாதையில் மற்றும் நோக்கத்தில் உறுதியோடு இருந்தார்கள். அவர்கள் ஒரு கொள்கைக்காக வாழ்ந்தார்கள். இவை எங்கே ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவிற்கு தெரியப்போகிறது.
http://www.athirvu.com/newsdetail/904.html
Geen opmerkingen:
Een reactie posten