தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதி அவசியம்!- அரசாங்கம்

கொழும்பு, புறக்கோட்டை தங்க ஆபரண கடைத்தொகுதி இன்று திறப்பு
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 12:41.54 AM GMT ]
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி இன்று மாலை 4.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந்த நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றவுள்ளனர்.
1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலம் முதல் சென். ஜோன்ஸ் மீன் சந்தையாகவும் 1983 ஆம் ஆண்டு முதல் மீன் சந்தையுடன் மத்திய கொழும்பு சந்தை கட்டடத் தொகுதியாகவும் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த மேற்படி கட்டடத் தொகுதி, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இது இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதியாக மாற்றப்பட்டு இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளரும், காணி முகாமைத்துவ மற்றும் திட்டமிடல் தொடர்பான ஆலோசகருமான வீரசேன அதிகாரி தெரிவித்தார்.
மேற்படி அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டமாக கீழ் மற்றும் முதலாம் மாடிகளில் 83 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80 கடைகள் இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரண காட்சி அறைகளாக பயன்படுத்தப் படவுள்ளன.
அத்துடன் இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் கிளை ஒன்றும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற் கொண்டு இரண்டு வங்கிகளும் திறந்து வைக்கப்படவுள்ளன.
கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பூரண வழிக்காட்டலில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjs1.html

விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதி அவசியம்!- அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 12:22.08 AM GMT ]
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் அவர், வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
எந்தவொரு அதிகாரியும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவரை விடவும் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமைய வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்படுமா என செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், விக்னேஸ்வரனின் இந்திய விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளிக்குமா இல்லையா என்பது பற்றி கெஹலிய எதனையும் குறிப்பிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjsz.html

Geen opmerkingen:

Een reactie posten