தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 september 2014

நவிப்பிள்ளை இல்லாத நின்மதியில் கெஹலிய~!

பொலிஸ் நிலையம் முன்னால் திடீரென தீக்குளிப்பு

இதன்போது படுகாயமடைந்த இவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கலல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு தீ வைத்துக் கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/80849.html

நவிப்பிள்ளை இல்லாத நின்மதியில் கெஹலிய

இந்தநிலையில் இவர் பக்கச்சார்பின்றி செயற்படுவார் என நம்புவதாகவும், நவனீதம் பிள்ளை பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இரகசியமானதல்ல எனவும், நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது தகவல் தொழிநுட்ப அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் பக்கச்சார்புடன் செயற்பட்டதாக, அவர் இதன்போது கூறினார். அத்துடன் அல் ஹூசெய்னை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் வௌிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் எனவும் ஹெகலிய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஆறு வருடங்கள் பதவி வகித்த, தென்னாபிரிக்க வாழ் தமிழரான நவனீதம் பிள்ளை கடந்த மாத இறுதியுடன் (ஆகஸ்ட் 31) விடைபெற்றார். இவரது காலத்தில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை பல்வேறு சிக்கலைகளை எதிர்கொண்டது.
மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நிபுணர்கள் குழுவொன்றையும் பிள்ளை நியமித்துள்ளார். குறித்த குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் இதுவரை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/80852.html

Geen opmerkingen:

Een reactie posten