கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வயோதிபர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
60 வயதுடைய வயோதிபரே இவ்வாறு தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நவநீதம்பிள்ளைக்கு எதிராகவே கொள்ளுப்பிட்டியில் தீக்குளிப்பு- பொலிஸ்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிர்ப்பு வெளியிட்டே இன்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஒருவர் தமக்கு தாமே தீமூட்டி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த தகவலை இன்று மாலை வெளியிட்டுள்ளார்.
இன்று காலை 75 வயதான பன்னிப்பிட்டிய கலல்கொட என்ற இடத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தீக்குளித்தார்.
இதன்பின்னர் கடும் தீக்காயங்களுடன் அவர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்தநிலையிலேயே அவரின் தற்கொலை முயற்சி நவநீதம்பிள்ளைக்கு எதிரான நடவடிக்கை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் 22 வருடங்கள் இராணுவ சேவையில் பணியாற்றியுள்ளார் எனவும், தனக்கு தானே தீ மூட்டிகொள்வதற்கு முன்னர், மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ மற்றும் நவசம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்னவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நவநீதம்பிள்ளை நேற்று முன்தினமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியில் இருந்து விலகினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUko6.html
Geen opmerkingen:
Een reactie posten