யாழ்ப்பாணம், வரணி பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் ஜெயரஞ்சன் (வயது 31) என்ற குடும்பஸ்தரை காணவில்லையென அவரது மனைவி, நேற்று திங்கட்கிழமை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி, பளையிலுள்ள இரும்பு ஒட்டும் வர்த்தக நிலையமொன்றுக்கு வர்ணப்பூச்சு வேலைக்காகச் சென்ற அவர், இதுவரையில் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/80855.html
Geen opmerkingen:
Een reactie posten