தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

கேரளாவில் மது ஒழிப்பு கொள்கை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சாதகம்: இந்திய ஊடகங்கள்!

பௌத்த துறவியாக துறவறம் பூண்ட இத்தாலியர்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 08:50.04 AM GMT ]
தேரவாத பௌத்த தர்மத்தில் பக்தி கொண்ட இத்தாலிய பிரஜை ஒருவர் இன்று பௌத்த மதத்தை தழுவிக்கொண்டதுடன் துறவறம் பூண்டார்.
இந்த சம்பவம் பேருவளை பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.
37 வயதான இந்த இத்தாலிய பிரஜை,  இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பௌத்த விகாரைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
குறித்த விகாரையின் விகாரதிபதியாக இருக்கும் மொல்லிகொட தீரானந்த தேரரிடம் அவர் பல வருடங்களாக பௌத்த மதம் பற்றி கற்றுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை வந்த அவர் பேருவளை சைல பிம்பாராம விகாரையில் அவர் துறவறம் பூண்டார்.
மௌரிசியோ பாரா என்ற தன் இயற்பெயரை அவர் ரோமின் நாரத தேரர் என மாற்றிக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUft4.html
ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுவோம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 08:58.56 AM GMT ]
பொங்குதமிழென சங்கே முழங்கு என தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரி, புலம்பெயர் தமிழர்களால் இருவேறு கண்டங்களில் மக்கள் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
எதிர்வரும் திங்கட்கிழமை(15.09.2014) ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாலும், தொடர்ந்து (24-09-2014) நியூயோக்க் ஐ.நா பொதுச்சபையின் முன்னாலும் இந்த எழுச்சி நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.
ஜெனீவா எழுச்சி நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களோடு ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும், நியூயோர்க் எழுச்சி நிகழ்வில் அமெரிக்கா வாழ் தமிழ் மக்களோடு கனடாவில் இருந்தும் தமிழ் மக்கள் இணைந்து கொள்கின்றனர்.
காலத்தின் தேவையறிந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எழுச்சி நிகழ்வுகளில், தமிழ் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு எமக்கான உரிமைக்குரலை உரத்து வெளிப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களையும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.
சிறிலங்கா அரசால் தம்மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்ப முடியாதுள்ள தாயக மக்களின் பொங்குதமிழ் முழக்கமாக, எமது குரல்கள் ஐ.நாவினை நோக்கி ஒங்கி ஒலிக்கட்டும்.
ஜெனீவா
ஐ.நா மனித உரிமைச்சபையின் 27வது கூட்டத் தொடர் அமர்வு இடம்பெற்றுவரும் வேளையில், ஜெனீவா மனித உரிமைச் சபை முன்றலில் (15-09-2014) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்ந எழுச்சி நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக விசாரணை தொடர்பிலான முதலாவது வாய்மொழியறிக்கை சபையில் முன்வைக்கபட இருக்கின்றது.
ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணையினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், சிறிலங்கா மீதான அழுத்தங்கள் அதிகரித்துச் செல்லும் சூழல் காணப்படுகின்றது.
அனைத்துலக விசாரணையின் சாட்சியங்களுக்கான பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தவும, அவர்கள் மீதான அச்சுறுத்தல்களின் பின்விளைவுகளை சிறிலங்காவுக்கு எச்சரிக்கை செய்யவும், ஐ.நா மனித உரிமைச்சபையானது ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரை செய்யவேண்டுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனித உரிமைச்சபையின் புதிய ஆணையாளர் அவர்களிடம் ஏலவே கோரியுள்ளது.
இக்கோரிக்கையினை வலுப்படுத்தும் வகையில், அனைத்துலக நாடுகளை நோக்கி மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
நியூயோர்க்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் முன்னே நடைபெறுகின்ற (24-09-2014)பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வும் காலமுக்கியத்துவம் நிறைந்ததே.
ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலையினைத் தலைமை தாங்கி நடாத்திய சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஐபக்ச, இரத்தம் தோய்ந்த கரங்களோடு ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றார்.
சிறிலங்கா அரசுத் தலைவரின் வருகைக்கு எதிர்ப்புக் காட்டுவதுடன், சிறிலங்கா அரசினது தமிழினத்தின் மீதான இனப்படுகொலையினை அனைத்துலகத்தின் முன் அம்பலப்படுத்தி, தமிழர்களுக்கான பரிகார நீயினை இந்நாளிலும் கோரி பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆட்சிப்பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனால், இப்பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வென்பது பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
அன்பார்ந்த தமிழ் உறவுகளே !
நாம் அனைவரும் ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து, தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வீச்சுடன் முன்னோக்கி நகர்த்துவோம்.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUft5.html
இழுவை படகு மீன்பிடி முறையை உடனடியாக கைவிட முடியாது: தமிழக மீனவர்கள்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 09:02.35 AM GMT ]
இழுவை படகை பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறைமையினை உடனடியாக இடைநிறுத்த முடியாது என தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கை - இந்திய கடற்பரப்பில் தமிழ் நாட்டு மீனவர்கள் பொட்டம் - ட்ராவலிங் முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாக கடல் வளம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நடைபெற்றிருந்த பேச்சுவார்த்தைகளின் போது, பொட்டம் ட்ராவலர் படகுகளை பயன்படுத்த வேண்டாம் என்று இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இதனை உடனடியாக இடைநிறுத்த முடியாது என்று, இலங்கையில் கைதாகும் மீனவர்களை விடுவிக்கும் இயக்கத்தின் தலைவர் யு.அருளாநந்தம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 72 படகுகளையும், 78 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUft6.html
கேரளாவில் மது ஒழிப்பு கொள்கை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சாதகம்: இந்திய ஊடகங்கள்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 09:17.51 AM GMT ]
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கள்ளு விற்பனை நிலையங்கள் உட்பட சகல மதுபான நிலையங்களும் நேற்றுடன் மூடப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்தது. 
இந்த நிலையில், கேரளாவை விரும்பிய சுற்றுலா பயணிகளின் கவனம் இலங்கை பக்கம் திரும்பலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கேரளா அரசாங்கம் சுற்றுலாத்துறையின் மூலம் வருடாந்தம் 22 ஆயிரம் கோடி இந்திய ரூபாவை வருமானமாக ஈட்டி வந்தது.
இந்த நிலையில், அதனை விட மூன்றில் ஒரு மடங்கு குறைவான வருமானத்தை ஈட்டும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பெரும் நன்மை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மதுபான தடை முற்றாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் கேரளாவிற்கு 8 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளனர்.
இலங்கையில் மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற கொள்கை அமுலில் இருந்தாலும் அங்கு பியர் பான நிலையங்கள் திறக்கப்பட்டு, மதுபான நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு ஐரோப்பிய விருந்தினர் உபசரிப்பு முறை உச்சளவில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனால், ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நாடிச் செல்லக் கூடும் எனவும் அவற்றில் கூறப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUft7.html

Geen opmerkingen:

Een reactie posten