தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 september 2014

இராணுவத் தலையீடு: நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

வெள்ளவத்தையில் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 06:06.59 AM GMT ]
கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு, பணத்தை செலுத்தாது மோசடி செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொருட்களை கொள்வனவு செய்த சந்தேக நபர்கள், போலி காசோலையை வழங்கியதாக வெள்ளவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொரளை மற்றும் நாராஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களுக்கு பல பண மோசடி சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkty.html
ஜுவல் லங்கா நகை மாளிகைக் கொள்ளை: குற்றவாளி மலேசியாவில் கைது
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 06:08.19 AM GMT ]
நீர்கொழும்பில் உள்ள ஜுவல் லங்கா நகை மாளிகைக் கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான எபள் ருவன் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தற்போது சிறையில் இருக்கும், ஐ.தே.க.மாகாணசபை உறுப்பினர் ரோய்ஸ் பெர்னாண்டோவுடன் இணைந்தே இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் எபள் ருவன் மலேசியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUktz.html
கமலேந்திரனை பிணையில் எடுக்க எவரும் இல்லை: விளக்கமறியல் நீடிப்பு
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 06:41.43 AM GMT ]
வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையில் எடுப்பதற்கு  எவரும் வராத காரணத்தால், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கமலேந்திரனை 2 இலட்சம் ரூபாய் காசுப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி அனுமதியளித்தார்.
வழக்கு முடிவடையும் வரையில், யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதியில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளிநாடு செல்ல முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அத்துடன், இரண்டாவது சந்தேகநபரான நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் மனைவி அனிட்டாவை, 50 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதியளித்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பான சாட்சியங்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என அவ்விருவருக்கும் நீதிபதி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, கமலேந்திரனையும் அனிட்டாவையும் எவரும் பிணையெடுப்பதற்கு முன்வரவில்லை.
இதனையடுத்து, எதிர்வரும் 16ஆம் திகதி வரை இருவரையும் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, மூன்றாவது சந்தேகநபரான இளைஞனுக்கு பிணை மனுக்கோரி விண்ணப்பிக்காத நிலையில் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியன் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி, அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkt0.html
நாட்டை என்னிடம் தாருங்கள் அபிவிருத்தி செய்து காட்டுகிறேன்: பொன்சேகா சவால்
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 06:46.59 AM GMT ]
நாட்டை தன்னிடம் ஒப்படைத்தால், மூன்று வருடங்களில் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்து காட்டுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனமல்வில பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள், கடந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு இரண்டு லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை வழங்கி ஆசிர்வாதம் செய்தனர்.
அந்த மாகாணங்களில் தமது ஆசிர்வாதத்தை ஆரம்பித்த மக்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அதனை இரண்டு முதல் மூன்று மடங்காக அதிகரிக்கவுள்ளனர்.
நாட்டை அபிவிருத்தி செய்ய ஏழெட்டு வருடங்கள் தேவையில்லை, மூன்று வருடங்களில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும்.
30 வருடங்கள் நடைபெற்ற யுத்தத்தை 33 மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்தது போல், நாட்டில் சட்டத்தையும், நியாயத்தை ஏற்படுத்தி, நாட்டு மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க எமக்கு மூன்று வருடங்கள் போதுமானது.
ஹம்பாந்தோட்டை மீட்கப்படாத பிரதேசம் போன்றது. அந்த பிரதேசத்தை குண்டர்களே ஆட்சி செய்து வருகின்றனர்.
கசினோ, சூதாட்டம், எதனோல், ஹெரோயின் போதைப்பொருட்களை அமைச்சர்களே கொண்டு வருகின்றனர்.
கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவது போல் இலங்கைக்குள் ஹெரோயின் கொண்டு வரப்படுகிறது. சமூகம் சீரழிந்து, குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkt1.html

இராணுவத் தலையீடு: நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 07:41.06 AM GMT ]
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடினார்
காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும்  போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் போராளிகளுக்கான வாழ்வாதாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுக்கு  சிவசக்தி ஆனந்தன் எடுத்துரைத்தார்.
பா. உறுப்பினரால் வலியுறுத்தப்பட்ட மேற்குறித்த விடயங்களை மிகுந்த அவதானத்துடன் செவிமடுத்த உயர்ஸ்தானிகர், தன்னால் இயன்றவரை குறித்த விடயங்களை முதன்மைப்படுத்தி ஆவன செய்வதாக தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் உயர்ஸ்தானிகருடன் அவருடைய உதவியாளர்களும், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு வெலிஓயா, மன்னார் முசலி, கொக்கச்சான்குளம் எனும் கலாபோவஸ்வௌ, செட்டிக்குளம், ஓமந்தை இறம்பைக்குளம் உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் ஏனைய பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றம், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் சிவசக்தி ஆனந்தன் விரிவாக எடுத்துரைத்தார்.
இதன்போது சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகள், இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் மக்களுடனான அணுகுமுறைகள், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை பாதுகாப்பு தரப்பினரும், புலனாய்வு பிரிவினரும் தொடர்ச்சியாக மிரட்டி வருதல் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுதல், முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் தொடர்ந்தும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்தி வரும் அரசின் செயற்பாடுகள், போரினால் விதவைகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களின் நிரந்தர வாழ்வாதாரம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வீட்டுத்திட்ட தெரிவில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை பற்றியும், பா. உறுப்பினராலும் மாகாணசபை உறுப்பினராலும் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
 இதற்கு பதிலழித்த உயர்ஸ்தானிகர் அது குறித்து தானும் அறிந்திருப்பதாக கூறினார். மேலும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்பாக தெரிவித்த விடயங்களை உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் இன்னமும் மீள்குடியேற்றப்படாத மக்கள் இருக்கிறார்களா? அவ்வாறு இருந்தால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்று  உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சிவசக்தி ஆனந்தன், வவுனியா பூந்தோட்டத்திலும் சிதம்பரபுரத்திலும் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருபது வருடங்களுக்கும் மேலாக மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkt5.html

Geen opmerkingen:

Een reactie posten