[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 06:47.38 AM GMT ]
யாழ் வரும் ஜேர்மன் தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் அபிவிருத்தி குறித்தும், இங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் அவர் ஆராயவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkt2.html
நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட 148வது பொலிஸ் தினம்
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 07:20.02 AM GMT ]
அந்தவகையில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் பொலிஸ் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சிரிபால அதிகாரி தலைமையில் பொலிஸ் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொலிஸாரின் விசேட அணிவகுப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் 148வது பொலிஸ் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொகான் டயஸ், யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு. ஐ.விமலசேனா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரெரா ஆகியோர் கலந்து கொண்டதுடன் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டனர்.
பொலிஸ் மா அதிபரால் 148ஆவது ஆண்டையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையும் தமிழ், சிங்கள மொழிகளில் வெளியிடப்பட்டது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் நிகழ்வுகள் நடைபெற்றன.
ஹட்டனில்...
யாழ்ப்பாணத்தில்..
மட்டக்களப்பில்...
ஏறாவூரில்..
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkt4.html
சட்டம் இன்றிய அராஜக நாடு: விஜயதாச ராஜபக்ஷ - ஜே.வி.பி கடந்த காலத்தை மறந்து விட்டது: ஜோன் செனவிரட்ன
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 07:43.32 AM GMT ]
தேர்தல் ஆணையாளர் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உதவுவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு அராஜக நிலைமையை நோக்கி பயணிப்பது இந்த செயற்பாடுகளின் மூலம் தெளிவாகியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தால், அதனை நிராகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருக்கின்றது.
இதற்காக அவர் சட்டமா அதிபரிடம் ஆலோசனையை பெற முடியும்.
எனினும் 1833 ஆம் ஆண்டு முதல் எவரும் தலையிட முடியாத சுயாதீனமான திணைக்களமாக இருந்து வந்த சட்டமா அதிபர் திணக்களம் தற்போது ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால், சுயாதீனமான சட்ட ஆலோசனை சட்ட மா அதிபரிடம் இருந்து கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரியது என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் வன்முறை பற்றி பேசும் ஜே.வி.பிக்கு கடந்த காலம் மறந்து விட்டது: ஜோன் செனவிரட்ன
அரசாங்கத்தின் வன்முறைகள் பற்றி பேசும் ஜே.வி.பியினருக்கு, அவர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட வன்முறைகள் மறந்து போயுள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜே.வி.பி அரசாங்கத்தின் வன்முறை பற்றி பேசுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினர் வாக்கு பெட்டிகளை சூறையாடினர்.
ஜே.வி.பியினர் வாக்களித்த முதல் பத்து பேரின் கைகளை வெட்டினர். சந்திகளில் எதிரணியினரின் தலைகளை வெட்டி தொங்க விட்டனர்.
இவ்வாறு நடந்து கொண்டவர்கள் தமது கடந்த காலத்தை மறந்து விட்டு பேசுகின்றனர்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் தீர்மானகரமான தேர்தல் என ஜே.வி.பியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூறுகின்றன.
அரசாங்கத்திற்கு மாகாண சபைத் தேர்தல் தீர்மானகரமான தேர்தல் அல்ல. உண்மையில் ஊவா மாகாணத்தில் இருக்கும் மக்கள் நன்றியுள்ளவர்கள். ஊவா மாகாணத்திற்கு சேவை செய்தது யார் என்பது அந்த மக்களுக்கு தெரியும்.
இதனால், மக்களின் வாக்குகளை பலவந்தமாக பெற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை. செய்த சேவைகளை நோக்கும் போது கிடைக்க போவது வெறுமனே வெற்றியல்ல. அமோக வெற்றி என்பது நிச்சயம் எனவும் ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkt6.html
Geen opmerkingen:
Een reactie posten