தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் செல்லும் மஹிந்த!

ஊவா மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க வேட்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 10:01.47 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் திஸ்ஸ குட்டியாராச்சி என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை செப்டெம்பர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நபரொவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊவா மாகாண சபைதேர்தலில் ஐ.தே.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சம்பத் ஜயசூரியவின் மகனான தரிந்து சம்பத் ஜயசூரிய (26) என்பவரை கடந்தவாரம் கத்தியால் குத்தி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஜானக குட்டியாராச்சி பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் பொலிஸ் நிலையத்தில் இன்று சரணடைந்தார். அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை, நீதிபதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
 இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhuz.html
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் செல்லும் மஹிந்த!
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 09:41.18 AM GMT ]
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடர் இம் மாதம் 16ஆம் திகதி முதல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரையில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்மாதம் 24 முதல் 26 வரை நடைபெறவுள்ள பொது விவாதத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ள 21 ஆம் திகதி நியூயோர்க் நோக்கி ஜனாதிபதி மஹிந்த பயணிப்பானர் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhuy.html

Geen opmerkingen:

Een reactie posten