தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

பாடசாலையின் களஞ்சியசாலையில் மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர் அதிரடி கைது !

மகிந்தரால் இந்தியப் பெருங்கடலுக்குள் முதல் முதல் பிரவேசித்த சீன நீர்மூழ்கிக் கப்பல் !

[ Sep 27, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 6435 ]
சீன அதிபர் இலங்கை சென்றவேளை, சீனாவின் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்திற்கு சென்று திரும்பியது. இதேவேளை அதனை தொடர்ந்து மேலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கை சென்றுள்ளது என அறியப்படுகிறது. நேட்டோ நாடுகளால் இதற்கு ஒரு ரகசிய குறியீடும் வைக்கப்படுள்ளது. அதாவது குறித்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் எங்கு சென்றாலும் அதனை நேட்டோ நாடுகள் அவதானிப்பது வழக்கம். இதற்கு நேட்டோ நாடுகள் வைத்துள்ள குறியீடு (SONG CLASS) ஆகும். குறித்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் இதுவரை இந்து சமுத்திரத்தில் பயணிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் முதன் முறையாக அது இந்து சமுத்திரத்தில் பயணித்து கொழும்பு சென்றுள்ளது.
அதுவும் மகிந்தர் கொடுத்துள்ள ஆதரவால். இந்த விடையமானது இந்தியாவின், பொறுமையை சோதிக்கும் விடையமாகும். ஆனாலும் நரேந்திர மோடி தொடர்ந்தும் மெளனம் காத்து வருகிறார் என்பது தான் பெரும் ஆச்சரியமான விடையமாக உள்ளது. சீனாவுடன் தனது நட்பை வளர்த்துக்கொண்டுள்ள இலங்கை, இந்தியாவின் வாயில் விரலை விட்டு ஆட்டுகிறது என்பதே யதார்த்த நிலையாகும். மேலும் முரன்பாட்டிற்குள் சென்றால், அன் நாடு சீனாவுடன் மேலும் நெருக்கமாகும் என்று இந்திய கொள்கைவகுப்பாளர்கள் கருதுகிறார்கள். இது சிலவேளை தவறான கருத்தாவும் இருக்கலாம். ஒரு சிறிய தட்டு தட்டி வைத்திருந்தால் தான் இலங்கை கட்டுப்பாட்டில் அடங்கி ஒடுங்கி இருக்கும் என்று இந்தியா எப்போது கருதும்.
இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தவேளை, தனது போர் விமானங்களை அத்துமீறி இலங்கைக்குள் அனுப்பி யாழ்பாணத்தில் உணவுப் பொட்டலங்களை போட்டார். அதனூடாக பிராந்திய வல்லரசு இந்தியா தான் என்பதனை நிரூபித்தார். ஆனால் அந்த துணிச்சல் தற்போது ஆட்சியில் உள்ள எவருக்கும் இல்லை என்று தான் கூறவேண்டும்.
http://www.athirvu.com/newsdetail/1093.html

பாடசாலையின் களஞ்சியசாலையில் மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர் அதிரடி கைது !

[ Sep 27, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 8115 ]
11 வயது பாடசாலை மாணவனொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அப்பாடசாலையின் அதிபரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, தலைமன்னார், கட்டுக்காரன் குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன், தற்போது மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தலைமன்னார் கட்டுக்காரன் குடியிறுப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கல்வி பயின்று வந்த 11 வயது மாணவனொருவரை, கடந்த செவ்வாய்க்கிழமை (23), பாடசாலையின் களஞ்சியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ள பாடசாலையின் அதிபர், அம்மாணவனின் சீருடைகளைக் களைந்து துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில், குறித்த மாணவனின் பெற்றோர், தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்ததை அடுத்து, நேற்று வியாழக்கிழமை, மேற்படி பாடசாலையின் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரான அதிபரை இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
http://www.athirvu.com/newsdetail/1094.html

Geen opmerkingen:

Een reactie posten