தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

தமிழ் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்!- இந்தியா வலியுறுத்து!

இலங்கை அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிறது!- இந்திய ஊடகம்
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 11:33.28 PM GMT ]
இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணசபையில் ஆளும் கட்சி சிறிய வெற்றியடைந்தநிலையில் இந்த தயார்ப்படுத்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விசேட நடவடிக்கை நிலையம் ஒன்றை அமைச்சர் பெசில் ராஜபக்ச ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்;திலேயே நியதிப்படி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும்.
எனினும் 4வருட பூர்த்தியடைந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கம் நிறைவேற்றியுள்ள 18வது திருத்த சட்டத்தின்கீழ் மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அரசியல் ஆர்வாய்வாளர்களின் கருத்துப்படி 2009ம் ஆண்டு போரில் வெற்றி பெற்ற போது ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்சக்கு இருந்த வரவேற்பு தற்போது ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKViu3.html

பா.ஜ.க.- பொதுபல சேனா பிரதிநிதிகள் இரகசிய சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 11:44.18 PM GMT ]
இலங்கை வந்திருந்த பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுபல சேனா தரப்பினருக்கிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
பா.ஜ.க.சார்பில் அதன் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், விஜய் ஜோலி ஆகியோரும் பொதுபல சேனா சார்பில் திலந்த விதானகே, ஞானசார தேரர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 23ம் திகதி நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு எதுவித தகவல்களும் வழங்கப்படவில்லை. சந்தித்துக் கொண்ட இரு தரப்பினரும் அது குறித்து தகவல்களை வெளிப்படுத்தவில்லை.

இலங்கை, இந்திய நாடுகளில் முஸ்லி்ம்களுக்கெதிரான நடவடிக்கைகளில் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பில் ஆராயவே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
அதன் காரணமாகவே ஊடகங்களுக்கு இது தொடர்பில் தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKViu4.html
தமிழ் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்!- இந்தியா வலியுறுத்து
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 11:57.53 PM GMT ]
இலங்கை தமிழர்களுக்கான தீர்வு அதிகாரப்பகிர்வின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர்களான முரளிதரராவ் மற்றும் விஜய் ஜொலி ஆகியோர் தமது இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் முன்னர் இன்று கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
இதன்போது கருத்துரைத்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் இலங்கையின அரசியல் அமைப்புக்குள் இருந்துகொண்டே இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும் என்று குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதை வைத்துக்கொண்டு அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணக்கூடாது.
இந்தநிலையில் மலையக தமிழ் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்க்கவும், வீடில்லா பிரச்சினையை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று முரளிதர ராவும் ஜொலியும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKViu5.html

Geen opmerkingen:

Een reactie posten