தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

எதிர்ப்பைக் காட்டுவதற்காக வெளிநாடு செல்லவில்லை: மங்கள சமரவீர விளக்கம்

பேஸ்புக்கில் வவுனியா பொடியன்: 16 வயது சிறுவன் கைது
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 07:25.57 AM GMT ]
வவுனியா தோணிக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா, தோணிக்கல்- காந்திவீதி எனும் முகவரியில் வசித்து வரும் குறித்த சிறுவன், “வவுனியா பொடியன்” என்ற பெயரில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கணக்கொன்றை இயக்கி வந்துள்ளார்.
தனது பேஸ் புக் பக்கத்தில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து விமர்சித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, “வவுனியா பொடியன்” என்ற கணக்கு தோணிக்கல்லில் இருந்தே இயக்கப்படுவதை அறிந்த பொது மக்கள் சிறுவனின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அதன்பின்னர் இப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர் மூலமாக வவுனியா பொலிஸாரிடம் குறித்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சிறுவனைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUluz.html
எதிர்ப்பைக் காட்டுவதற்காக வெளிநாடு செல்லவில்லை: மங்கள சமரவீர விளக்கம்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 07:38.15 AM GMT ]
வெறுப்பு காரணமாகவோ, எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காகவோ நான் நேற்று அதிகாலை வெளிநாடு செல்லவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த பயணமாகவே தாம் வெளிநாடு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது வெளிநாட்டு பயணத்திற்கான அனுமதியை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று அதிகாலை அவசரமாக லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே மங்கள இவ்வாறு வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸவின் இணையத்தளமான லங்க சி. நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தி குறித்து கேட்ட போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மங்கள,
எதிர்வரும் 8 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாகவும் அதன் பின்னர் ஊவா மாகாண சபைத் தேர்தல் முடியும் வரை பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlu0.html

Geen opmerkingen:

Een reactie posten