தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

கிளிநொச்சி குடும்பத்தில் நடந்த சோகத்தின் உச்சம்….

வவுனியா தேக்கவத்தையில் பொலிசாருக்கு எதிராக மக்கள் வீதியில்

தேக்கவத்தையில் அமைந்துள்ள பொதுக்கிணறை மக்களின் பாவனைக்கு விடாமல் குறிப்பிட்ட சில வாரங்களாக பொலிசார் தடைவிதித்து தங்களின் பாவனைக்கு மாத்திரம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
வவுனியாவில் ஏற்பட்ட வரட்சி காரணமாக மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு வரும் நிலையில் பொதுக்கிணறை  பயன்படுத்துவதற்கு தடைவிதித்தமையை கண்டித்து நேற்று  மாலை 6.30 மணியளவில் இலங்கை வான்படை வவுனியா தலைமைக்காரியாலயம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னாள் கண்டி வீதியில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


பொதுமக்களில் ஒருவர் வாகனங்களை மறித்து வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.VaunejaVauneja-01
http://www.jvpnews.com/srilanka/80798.html

வட-கிழக்குக்கு பஸ்களை மோப்பமிடும் பொலிஸ்

இதன்பிரகாரம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை ஊடாக அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கான சேவையில் ஈடுபடும் பஸ்களே இவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன. இந்த பஸ்களில்  பல, அனுமதிப்பத்திரமின்றி பயணங்களை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.
இவ்வாறாக, அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் பஸ் சேவைகள், உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், கொழும்பிலிருந்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு பயணிக்கும் பஸ்களை கண்காணிக்க கொழும்பு போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தலைமையகம் குறிப்பிட்டது.
சனிக்கிழமை  இரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ், உரிய அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட 6 பஸ்களின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/80802.html

கிளிநொச்சி குடும்பத்தில் நடந்த சோகத்தின் உச்சம்….

விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட கிளிநொச்சி  மாவட்ட மக்களுக்கு வரட்சி ஏற்படுத்தியுள்ள துயரம் அளப்பரியது. இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகளவில் குறைவடைந்துள்ள நிலையில், தமது தேவைக்காக அமைக்கப்பட்ட கிணற்றிலும் முற்றாக நீர் வற்றியுள்ள நிலையில் அன்றாட தேவைக்கு கூட நீரை பெற்றுக்கொள்வதில் இந்த பிரதேச மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
தமது அன்றாட தேவைக்காவது நீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் நீரை சேகரிக்கும் நோக்கில் மக்கள் காத்திருக்கின்றனர். வெறும் சோற்றையும், சின்னவெங்காயத்தையும் மாத்திரம் சாப்பிட்டு உயிர் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை.
வீட்டுக்கு உள்ளே சென்று ஒளிப்பதிவு செய்துவிட்டு எமது செய்தியாளர் மனவேதனையோடு திரும்பிச் செல்கையில் வீட்டிற்குள் இருந்து கேட்ட அழுகுரல் செய்தியாளரை மீண்டும் அந்த வீட்டிற்குள் விரைய வைத்தது. வரட்சி, வறுமை என்று சோகத்தில் வாடிய இந்தக் குடும்பத்தில் மற்றுமொரு சோகம் அங்கு நிகழ்ந்திருந்தது.
சிறிது நேரத்திற்கு முன்னர் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரை அந்தக் குடும்பம் இழந்து தவிக்கும் காட்சிகளை காணமுடிந்தது. அவ்வேளையில் வீட்டு உரிமையாளர் இயற்கை எய்தியிருந்தார்.Klinochchi-Famile Klinochchi-Famile-01Klinochchi-Famile-02Klinochchi-Famile-03Klinochchi-Famile-04Klinochchi-Famile-05Klinochchi-Famile-06
http://www.jvpnews.com/srilanka/80806.html

Geen opmerkingen:

Een reactie posten