[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 07:40.18 AM GMT ]
வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழகத்தினர் இணைந்து அண்மையில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தியதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.டி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கணக்கெடுப்பின் போது இந்த குதிரைகள் பரந்து வாழும் பிரதேசங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றை பாதுகாக்க தனியான பிரதேசம் ஒன்று ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காட்டுக் குதிரைகளுக்கு தண்ணீர் தேவை என்பதால், சிறிய நீர்த் தேக்கம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது எனவும் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlu1.html
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைவு
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 07:49.14 AM GMT ]
இதன் போது கருத்து தெரிவித்த தாமோதரம் உதயஜீவதாஸ,
விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கத்துடன் இணைந்து பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பல துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ளது. எமது பிரதேச இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
அதனடிப்டையில் இன்று நானும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டுள்ளேன்.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்பு எமது பிரதேச மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாத்திரமே எமது மக்களினுடைய அபிவிருத்திகளை நேரடியாகக் கொண்டுவர முடியும் என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வரும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்து பல துன்ப துயரங்களை அனுபவித்துள்ளனர். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் நாங்கள் அனைவரும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlu2.html
பிலிப்பைன்ஸிற்கு கல்விச் சுற்றுலா சென்ற பாதுகாப்புப் படையினர்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 08:12.23 AM GMT ]
இலங்கை பாதுகாப்புச் சேவை மற்றும் கூட்டுப்படைக் கல்லூரியின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் என்.ஜே. வல்கம தலைமையிலான 18 பேரைக் கொண்ட உத்தியோகத்தர்கள் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இவ்வாறு பயணம் செய்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் காணப்படும் பாதுகாப்பு நிறுவனங்களை படை உத்தியோகத்தர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள இந்த சுற்றுப் பயணம் உதவியாக அமையும் என தூதரக வட்டாரத் தகவல்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரி, இராணுவ விமான மற்றும் கடற்படைத் தலைமையகங்களையும் இலங்கை உத்தியோகத்தர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இரு நாட்டு படையதிகாரிகளுக்கும் இடையில் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlu3.html
ஆளும் கட்சிப் பிரதேச சபைத் தலைவருக்கு கொலை மிரட்டல் (செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 08:41.21 AM GMT ]
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் மகன் நாரத திஸாநாயக்கவினது ஆதரவாளர்கள் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆளும் கட்சியின் பிரதேச சபைத் தலைவர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹங்குராகெத்த பிரதேச சபையின் தலைவர் ரணசிங்க திஸாநாயக்க என்பவரே இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
“பிரதேச சபைத் தலைவர் நீ எமக்கு பெரியவனல்ல, இன்னும் ஐந்து நாட்களில் நாம் உன்னைக் கொலை செய்வோம்” என நாரத திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் என்னை அச்சுறுத்தினார்கள் என ரணசிங்க முறைப்பாடு செய்துள்ளார்.
ஹங்குராங்கெத்த தொகுதியின் அமைப்பாளராக கடமையாற்றிவரும் ஜயரட்ன திஸாநாயக்கவிற்கு மேலதிகமாக, இணை அமைப்பாளர் பதவி உயர்கல்வி அமைச்சரின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நேற்று அலரி மாளிகையில் வைத்து இந்த தொகுதி அமைப்பாளர் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
நாரத திஸாநாயக்கவின் நான்கு ஆதரவாளர்கள் இவ்வாறு தம்மை அச்சுறுத்தியதாக பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தியவர்களில் இருவரை அடையாளம் காட்ட முடியும், இருவரை கண்டதில்லை.
ஹங்குராங்கெத்தவில் மீண்டும் வன்முறைகளைத் தூண்டுவதே இவர்களின் நோக்கமாகும்.
பிரதேச சபை வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து, என்னை விரட்டியடிக்க எஸ்.பி. திஸாநாயக்க முயற்சித்தார்.
என்னை தலைவர் பதவியிலிருந்து வெளியேற்ற பல்வேறு வழிகளில் முயற்சித்தார். எனினும், நான் ஓர் சிறந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராவேன்.
தேவைக்கு ஏற்பட கட்சி தாவும் பழக்கம் என்னிடமில்லை என ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவோ அல்லது அவரது மகன் நாரதவோ ஊடகங்களுக்கு இதுவரையில் கருத்து வெளியிடவில்லை.
மட்டக்களப்பில் வாவியினுள் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்துக்கு அருகில் வாவியினுள் ஆண் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு வாவியினுள் சடலம் மிதப்பதினைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு பிள்ளையாரடி நாகையா வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.மிவீந்திரன் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது மகளின் சடங்கினை நிறைவேற்றிய நிலையில் இரவு வீட்டில் மனைவியுடன் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியவர் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இருந்த இடத்துக்கு வந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா விசாரணை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlu4.html
ஐ.நா மனித உரிமை ஆணையாளராக சையத் ஹுசைன் பதவியேற்பு
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 09:23.09 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக ஜோர்தான் நாட்டின் இளைவரசர் சையத் அல் ஹுஸைன் இன்று தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு வருடங்களாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் பதவியிலிருந்த நவநீதம்பிள்ளை நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நவநீதம்பிள்ளை,
தற்போது இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணையை நடத்திவரும் ஐ.நா குழு, சிறப்பான முறையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக தனது பணிகளை ஆரம்பித்த நவநீதம்பிள்ளை, 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி, மீண்டும் அப்பதவியில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பதவியேற்புக் காலம் நேற்றுடன் பூர்த்தியான நிலையில், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால், ஜோர்தான் நாட்டின் இளைவரசர் சையத் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகளின் புதிய ஆணையாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlu5.html
Geen opmerkingen:
Een reactie posten