[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 11:41.15 AM GMT ]
எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் மஹா சங்க மாநாட்டில் இதனை வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நாட்டுக்கும் இனத்திற்கும் ஆதரவான தலைவர் ஒருவருக்கான கடும் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மஹா சங்க மாநாட்டில் அது பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளோம்.
உண்மையான உணர்வுகளை கொண்ட பௌத்த பிக்குமாரை, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் அவரே அந்த பதவிக்கு பொருத்தமானவர் என்றும் பொதுபல சேனா அமைப்பு கூறி வருகிறது.
இந்த நிலையில், பொதுபல சேனா இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பு, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆசியுடனேயே இயங்கி வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjv4.html
மனுஸ் தீவில் கோமாவில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர் மரணம்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 11:39.33 AM GMT ]
சற்றுமுன் விறிஷ் பென் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளதாக அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் நோய் வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர், தற்போது மரணமாகி
உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர் காலத்தில் இது போன்று சம்பவங்களுக்கு இடம் கொடுக்காமல் அரசாங்கம் சரியான ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்றும், இவருடைய மரணத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என இயன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjv3.html
Geen opmerkingen:
Een reactie posten