தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு- கீரிமலை ஆலயத்திற்கு அருகில் கள்ளுத் தவறணை

கொத்மலை நீர்த் தேக்கத்தில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 12:17.45 PM GMT ]
மலையகத்தில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் முகமாக தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
மத்திய மாகாண நீரியல்வள திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மீன் குஞ்சுகளை நீர் தேக்கங்களில் விடும் வேலைத் திட்டத்தின் ஓர் கட்டமாக, முதல் முறையாக சுமார் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டதுடன், இதில் திலாப்பியா கீப்ட் வகையான மீன் இனம் நீரில் விடப்பட்டன.
தற்போது சிறிய அளவில் காணப்படும் இந்த மீன் குஞ்சுகள் ஆறு மாதத்தில் சுமார் ஒரு கிலோ முதல் நான்கு கிலோ எடை வரை வளர்ச்சியடையக் கூடியது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எட்டு மாதத்திற்கு பிறகு இந்த மீன்களை தலவாக்கலை லிந்துலை நகரசபையில் பதிவு செய்யப்பட்ட மீனவர்களை வைத்து மீன்களை பிடித்து, பிரதேசத்தில் குறைந்த வருமானம் உள்ள மந்த போசனையில் இருக்கும் குடும்பங்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களின் போஷாக்கிற்காகவும் மாதத்திற்கு இரண்டு தடவை 2 கிலோ மீன்களை இலவசாமாக கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீா்மானம் எடுத்துள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவா் அசோக சேபால தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் சில தினங்களில் இந்த மேல் கொத்மலை நீா்தேக்கத்திற்கு இறால் குஞ்சுகளை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

பால்மாவில் விஷம்: புதிய புரளியை கிளப்பும் பொதுபல சேனா
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 12:32.38 PM GMT ]
இலங்கையில் இருக்கும் பால்மா விஷத்துடன் கூடிய பானம் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் சிறார்களுக்கு சளி நோய் அதிகளவில் ஏற்பட பால்மா காரணமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பால் உணவு அத்தியாவசியமற்றது.  கல்வியும் ஊடகங்களும் பால் அத்தியாவசியமான உணவு என மக்களுக்கு கற்பித்து வருகின்றன எனவும் டிலாந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjv6.html


அத்துருகிரியவில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி- சிசுவை அடித்துக் கொன்ற யுவதி கைது
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 01:04.35 PM GMT ]
அத்துருகிரிய பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடுவலை - அத்துருகிரிய வீதியில் கார் ஒன்றில் வந்த சிலர், மற்றுமொரு காரில் வந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையாளரான குடு லலித் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலியான நபர், போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் தேடப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
20 நாட்களேயான சிசுவை அடித்துக் கொன்ற யுவதி கைது
கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களே ஆன சிசுவொன்று இன்று மாலை உயிரிழந்துள்ளது.
மாலை 3.40 அளவில் ஆபத்தான நிலையில், பிறந்து 20 நாளேயான ஆண் சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டதாகவும் எனினும் சில 30 நிமிடங்கள் மாத்திரமே சிசுவை உயிருடன் வைத்திருக்க முடிந்தாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வீட்டில் நடந்த தாக்குதல் ஒன்றில் குழந்தைக்கு இந்த ஆபத்தான நிலைமை ஏற்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
குழந்தையின் மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன், உறவு முறையான சகோதரியின் தாக்குதலில் இந்த குழந்தை இறந்துள்ளதாகவும் அதில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமான சகோதரி 22 வயதானவர் எனவும் குழந்தையை தாய்க்கு உதவதற்காக கொல்கஸ்ஹோவிட்ட பிரதேசத்தில் உள்ள அவர்களின் வீட்டில் இந்த யுவதி தற்காலிகமாக தங்கியிருந்தாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை மீது தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjv7.html


கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு- கீரிமலை ஆலயத்திற்கு அருகில் கள்ளுத் தவறணை
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 01:35.54 PM GMT ]
யாழ். மண்டைதீவு கிராமத்திலிருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலுக்காகச் சென்றவர் இன்று அல்லைப்பிட்டி கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மண்டைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த தேவசகாயம் சாள்ஸ் ஞானசீலன் (வயது-47) என்ற குடும்பஸ்தர் நேற்று முன்தினம் அதிகாலை கடற்றொழிலுக்காகச் சென்றுள்ளார்.
காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக அவர் கரைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் கடற்றொழிலுக்காகச் சென்றிருந்த மினவர்கள் சிலர் கடலில் ஆட்களற்ற நிலையில் காணப்பட்ட படகினை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
எனினும் குறித்த மீனவர் காணாமல்போனமை தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. இதனையடுத்து, இன்றைய தினம் காலை அல்லைப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
சடலத்தை மீட்ட பொலிஸார்,  அதனை அடையாளம் காட்ட உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஞானசீலனின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கீரிமலை ஆலயத்திற்கு அருகில் ஈபிடிபியின் கள்ளுத் தவறணை
யாழ்.கீரிமலை ஆலயத்திற்கு அருகில் கள்ளுத் தவறணை அமைப்பதற்கு பிரதேச சபை மற்றும் மதுவரி திணைக்களம் ஆகியன மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், வலி,வடக்கு பிரதேச சபையின் ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்க கட்சி ஆதரவாளர்களின் உதவியுடன் கள்ளுத் தவறணை இன்றைய தினம் அமைக்கப்பட்டுள்ளது.
வலி,வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கீரிமலை ஆலயத்திற்கு அருகில் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் கள்ளுத் தவறணை அமைப்பதற்கு தனியார் சிலர் முயற்சித்திருந்தனர்.
எனினும் அதற்கு அனுமதி வழங்க முடியாதென பிரதேச சபை மற்றும் மதுவரி திணைக்களம் ஆகியன மறுப்பு தெரிவித்திருக்கின்றன.
மேலும் குறித்த கள்ளுத் தவறணை அமைப்பதற்கு எதிராக பிரதேச மக்கள் நேற்றைய தினம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் கொடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சிறிது தாமதப்படுத்தப்பட்டிருந்த தவறணை அமைக்கும் பணிகளுக்கு வலி,வடக்கு பிரதேச சபையின் ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் இன்றைய தினம் கள்ளுத் தவறணை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தவறணை அமைப்பதற்கு எவ்விதமான அனுமதியும் பெறப்படவில்லை என பிரதேச சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
மேலும் இதற்கு படையினரும் தங்கள் முழுமையான ஆதரவினை வழங்கியிருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjwy.html

Geen opmerkingen:

Een reactie posten