இலங்கை சென்று மகிந்தவுடன் உறவாடி திரும்பியுள்ள கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு “இசட்” ரக பாதுகாப்பை கொடுத்துள்ளது நரேந்திர மோடியின் அரசு. ஜனதா தள் கட்சியை கலைத்துவிட்டு, பாரதி ஜனதா கட்சியில் சுப்பிரமணிய சுவாமி என்னும் கோமாளி அரசியல்வாதி இணைந்துகொண்டார். இவர் மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரும் ஆவார். அத்தோடு மட்டும் அல்லாது, இந்திய மீனவர்களின் படகுகளை நான் தான் பறிக்கச் சொல்லி ஆலோசனை வழங்கினேன் என்றும், அதனால் தான் சிங்கள கடற்படையினர் இந்திய மீனவர்களின் படகுகளை பறித்தார்கள் என்றும் வாய் கூசாமல் கூறியுள்ளார் இவர். இதனால் தமிழ் நாட்டில் சுப்பிரமணிய சுவாமியின் கொடும்பவி எரிக்கப்பட்டது.
இவர் தமிழ் நாட்டுக்கு வரும்போது மட்டும் “இசட்” ரக பாதுகாப்பை கொடுக்குமாறு மத்திய அமைச்சு கோரியிருந்தது. இந்தியாவில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு வழங்கும் அதி உயர் பாதுகாப்பையே இசட் பாதுகாப்பு என்று அழைப்பார்கள். தமிழ் நாட்டில் சுப்பிரமணிய சுவாமிக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, தற்போது இந்தியா முழுவதும் அவருக்கு “இசட்” பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திற்கு சென்றாலும் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு இருக்கும். இதனால் அம் மாநில பொலிசார் அவரை கைதுசெய்ய முடியாது. அல்லது தடுத்து நிறுத்த முடியாது.
இலங்கை சென்றுவந்ததற்கு பரிசாகா மோடியின் அரசு இதனை வழங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் என்ன தான் நடக்கிறது என்று புரியவில்லை. அரசியலே தெரியாத கோமாளிகளுக்கு எல்லாம் “இசட்” ரக பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/80892.html
Geen opmerkingen:
Een reactie posten