SLMC அமைச்சர் போதையில் கலாட்டா!
ஆனாலும் புல்மோட்டை பகுதியிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் குதூகலமாக கொண்டாடப்படவிருந்த இந்நிகழ்வு இடை நிறுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான புல்மோட்டை பகுதிக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் நேற்றிரவு மது போதையில் வருகை தந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் முரண்பட்ட காரணத்தினால் இந்நிகழ்வு ரத்து செய்யப்படுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் அப்பகுதியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் மது போதையில் வருகை தந்து மக்கள் மனதை துன்புறுத்தியதினால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புல்மோட்டை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் .தௌபீக்-ஹாபீஸ் நசீர் -அன்வர் -மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எவ்வளவு முன் மாதிரியாக உள்ளார்கள் ஏன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அடாவடித்தனத்துடன் செயற்பட்டு வருகின்றார் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியிலும் கசப்பு தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்
அத்துடன் கிண்ணியா -மூதூர் பகுதிகளில் நாளை இடம்பெற உள்ள நிகழ்வுகளுக்கு ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வார் எனவும் முக்கிய பிரதி நிதியொருவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கிண்ணியா -மூதூர் பகுதிகளில் நாளை இடம்பெற உள்ள நிகழ்வுகளுக்கு ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வார் எனவும் முக்கிய பிரதி நிதியொருவர் குறிப்பிட்டார்.
http://www.jvpnews.com/srilanka/80888.html
விக்கியின் கடிதம் மோடியிடம்….
இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடமாகாண சபை தேர்தல் ஆனது இந்தியாவின் வலியுறுத்தல் காரணமாகவே நடத்தப்பட்டது. இதற்காக நாம் முதலில் இந்திய அரசாங்கத்திற்கே நன்றியை தெரிவிக்கின்றோம். வடமாகாண சபைத் தேர்தலில் நாம் பெருவெற்றி ஈட்டியிருந்தோம். எமக்கு மக்கள் பெரும் ஆணையினை வழங்கியிருந்தனர். சூனாலும் வடமாகாண சபையை செயற்பட விடாது அரசாங்கமானது தடுத்து வருகின்றது. இதற்கென பல்வேறு விதமான முட்டக்கட்டைகளையும் போட்டு வருகின்றது. இதனால் நாம் இயங்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.
எமது சபையின் செயற்பாடுகளுக்கு இலங்கைப் படையினரும் இடையூறுகளை செய்து வருகின்றனர். இதனால் நாம் இயங்க முடியாது மக்களுக்கு சேவை செய்ய முடியாது உள்ளோம். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு நான் பல நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிக்காட்டியிருந்தேன். ஆனால் அந்த நல்லெண்ணை நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. இந்நிலையில் இந்தியப் பிரதமராக நீங்கள் வெற்றியீட்டியமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. உங்களை சந்திப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுமாயின் அதனை நான் மனமுவந்து ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/80886.html
Geen opmerkingen:
Een reactie posten